Saturday, 16 June 2018

GST 12% உயர்நிலை காரணமாக சுவாமி சிலைகள் தொழில் முடக்கம்

தஞ்சை மாவட்டம் சுவாமிமலை, தாராசுரம், திருவலஞ்சுழி, அலவந்திபுரம், நாககுடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில், சிலை வடிக்கும் சிற்பக்கலைஞர்கள் 500க்கும் மேற்பட்டோர் உள்ளனர். சுவாமிமலையில் அதிகளவில் சிற்ப கூடங்கள் உள்ளன. இங்கிருந்து வெளிநாடு, வெளிமாநிலங்களுக்கும் ஆர்டரின் பேரில் சிலைகள் அனுப்பப்படுகின்றன. கடந்த ஆண்டு ஜிஎஸ்டி அமலுக்கு வந்தபோது, ஐம்பொன் சிலைகளுக்கு 12 சதவீத வரி விதிக்கப்பட்டது. அதோடு, இதற்கான மூலப்பொருட்களின் விலையும் உயர்ந்தன. எனவே, ஐம்பொன் சிலைகளின் விலை அதிகரித்ததால், ஆர்டர்களும் பெருமளவில் குறைந்து விட்டன. இதனால் ஐம்பொன் சிலைகள் செய்யும் தொழில் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சிற்பக்கலைஞர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து பூம்புகார் முன்னாள் இயக்குனர் , கைவினைப் பொருட்களில் வரிசையில், ஐம்பொன் சிலைகளுக்கு முக்கிய இடம் உண்டு. இதற்கு ஜிஎஸ்டி விதித்ததால், 5 அடி உயர சிலைக்கு ₹10,000 வரை விலை உயர்ந்து விட்டது. தற்போது பெரும்பாலானோர் சிலை செய்வதை விட்டு விட்டு சாத்து முறை எனும் முகம் மற்றும் கைகளை மட்டும் செய்ய ஆர்டர் கொடுக்கின்றனர். சிலை செய்யும் மூலப்பொருட்களில் ஒன்றான செம்பு 18 சதவீதம், பித்தளை 12 சதவீதம் விலை உயர்ந்துள்ளது.29 கைவினை பொருட்களுக்கு ஜிஎஸ்டியை குறைப்பதாகவும், சில கைவினை பொருட்களுக்கு வரியை ரத்து செய்வதாகவும் மத்திய அரசு அறிவித்தது. ஆனால், இதுவரை வரி ரத்து செய்யப்படவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு, வெளிநாடுகளுக்கு சிலை அனுப்ப, அதற்கான ஆவணங்களை மத்திய அரசின் கைவினை வாரிய அபிவிருத்தி அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். ஒரு மணி நேரத்தில் அனுமதிச் சான்று கிடைத்துவிடும். தற்போது சென்னையில் உள்ள அலுவலகத்தில் மாதம் ஒரு முறை நடைபெறும் கூட்டத்தின்போது சிலைகளை நேரடியாக கொண்டு சென்று காண்பித்து சான்றிதழ் பெற வேண்டுமென தொல்லியத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் சிலைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான சான்றிதழ் பெற ஒரு மாதத்துக்கு மேலாகிவிடுகிறது. சிலைகளுக்கு விதித்த ஜிஎஸ்டியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.