மத்திய நறுமண பொருட்கள் வாரியம் மூலமாக கேரளா இடுக்கி மாவட்டத்திலுள்ள புத்தடி நறுமணவாரியத்திலும், தமிழ்நாட்டில் தேனிமாவட்ட போடி நறுமணவாரியத்திலும் வாரத்தில் தலா 3 நாட்களாக ஏலக்காய் ஏலம் தொடர்கிறது. ஆன்லைன் மூலமாக ஏலம் நடக்கிறது. இதில், பணப்பட்டுவாடா முறையில் முறைகேடுகள் நடக்காதவாறு பணமாரிமாற்றத்தை ஒழுங்குப்படுத்த `எஸ்குரோ’’ என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் காலதாமதம் இல்லாமல் விவசாயிகளுக்கு எளிதான முறையில் உடனடியாக பணம் கிடைக்கும். பணப்பரிமாற்ற தகவலை உடனே இணையதளம், செல்போன் வழியாக தெரிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கும்.மேலும் விற்பனை கம்பெனிகளின் வங்கி கணக்கிலிருந்து விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். விவசாயிகள், வியாபாரிகளுக்கு கிடைக்க வேண்டி நிலுவைத் தொகையினையும் மற்றும் விற்பனை கம்பெனிகளின் பிணைக்கழிவு (கமிஷன்) தொகையை நேரடியாக ஸ்பைஸஸ் வார்டு கண்காணிக்க முடியும். இம்முறையின் பயனாக விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் விற்பனை கம்பெனிகள் ஒருமுறை பதிவு செய்து அதற்கான பாஸ்வேர்டை (ரகசிய பதிவு எண்ணை) பெற்றுக் கொள்ள வேண்டும். இதன் மூலமாக பண பரிவர்த்தனைகளை இணையதளம் அல்லது செல்போன் மூலம் எளிதாக தெரிந்து கொள்ளலாம். ஆன் லைன் மூலமாக வரும் ரசீதை காண்பித்த பின்பே, வியாபாரிகளுக்கு கொள்முதல் ஏலக்காய் வழங்கப்படும். இதனால் கம்பெனிகள் வங்கி உறுதிமொழி பத்திரத்தை காண்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என நறுமண பொருட்கள் வாரிய தலைவர் டாக்டர் ஜெயதிலக் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.