Friday, 22 June 2018

அமெரிக்கா நாட்டுக்கு இந்தியா வரி விதிப்பு

புதுடெல்லி:இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் அலுமினியம், ஸ்டீல் பொருட்களுக்கு 24 கோடி டாலருக்கு மேல் அமெரிக்கா வரி விதித்தது. இதனால் இந்தியாவுக்கு இழப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், வரி விதிப்பை அமெரிக்கா மறு பரிசீலனை செய்யவில்லை. இந்நிலையில், அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 29 பொருட்களுக்கு இந்தியா வரியை உயர்த்தியுள்ளது. இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் கொண்டைக்கடலை, கடலைப்பருப்புக்கு வரி 30 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மசூர் பருப்புக்கு 30 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக வரி உயர்ந்துள்ளது. அக்ரூட் மீதான வரி 30 சதவீதத்தில் இருந்து 120 சதவீதமாகவும், ஆப்பிள்கள் மீது 50 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாகவும் வரி உயர்ந்துள்ளது. போரிக் அமிலம் 17.5 சதவீதமாகவும், பாஸ்பாரிக் அமிலம் 20 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இவற்றின் மீதான வரி முன்பு 10 சதவீதமாக இருந்தது. ஓடு நீக்கப்படாத பாதாம் பருப்புக்கு வரி கிேலாவுக்கு 100ல் இருந்து 120 ஆக அதிகரித்துள்ளது. ஓடு நீக்கப்பட்ட பாதாம் பருப்பு மீதான வரி கிலோவுக்கு ₹35ல் இருந்து 42 ஆகியுள்ளது. இரும்பு 15 சதவீதத்தில் இருந்து 27.5 சதவீதம் ஆகியுள்ளது. பவுண்டரிகளில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான மோல்டுகளுக்கு 7.5 சதவீதமாகவும், ஆய்வக வேதிப்பொருட்களுக்கு 10 சதவீதமாகவும் வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், 800 சிசிக்கு அதிகமான பைக்குகளின் மீதான வரி உயர்த்தப்படவில்லை. மேற்கண்ட வரி உயர்வுகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. ஆர்டீமியா வகை இறால் மீன்களுக்கு வரி 30 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது ஆகஸ்ட் 4 முதல் அமலுக்கு வருகிறது

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.