ஈராக், சவூதி அரேபியாவுக்கு அடுத்ததாக ஈரானில் இருந்து இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. கடந்த நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் 1.84 கோடி டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தது. ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த மே மாதம் விலகியதும், இந்தியா, சீனா உள்ளிட்ட உலக நாடுகள் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்க வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், “ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தி கொள்ளாவிட்டால் இந்தியாவும், சீனாவும் பொருளாதார தடைகளை சந்திக்க நேரிடும். இந்த நாடுகள் தங்களின் இறக்குமதி அளவை படிப்படியாக குறைத்து, வரும் நவம்பர் 4ம் தேதிக்குள் முற்றிலும் நிறுத்த வேண்டும்’’ என்றார். இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் கூறுகையில், ‘‘அமெரிக்கா வேண்டுகோள் பற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. ஆனால் கச்சா எண்ணெய் இறக்குமதியில் மாற்று வழிகளை யோகிக்கும்படி எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களிடம் பெட்ரோலியத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. தெளிவான முடிவு இன்னும் ஒரு வாரத்தில் எடுக்கப்படும்’’ என்றனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.