நமது பகுதியில் பல்வேறு கிராமங்களில் தோட்டங்களில்பப்பாளி மரங்களை வளர்த்து வருகின்றனர். பப்பாளி 8 மாதத்தில் காய்த்து பலனை தரும். தப்போது மரங்களில் பப்பாளிக்காய் கொத்து கொத்தாக காய்த்துள்ளது. சில மரங்களில் பழங்களையும் காணமுடிகிறது. விவசாயிகள் பழங்களை பறித்து மார்க்கெட் மற்றும் பிற பகுதிகளுக்கு கொண்டு சென்று மொத்தமாக விற்கின்றனர். பப்பாளி விளைச்சல் அதிகரித்துள்ளதால், விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். இந்த ஆண்டு பப்பாளி விளைச்சல் நன்றாக உள்ளது. மருத்துவ குணம் கொண்ட இப்பழங்களை மக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். விவசாயிகளிடம் ஒரு கிலோ பழம் 15க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். ஆனால் பொதுமக்களுக்கு ₹30 முதல் ₹35 வரை விற்கின்றனர். பப்பாளிக்கு உரமிடுதல், பூச்சி கொல்லி மருந்து தெளித்தல் மற்றும் பராமரிப்பு செலவுகளை விற்பனை விலையால் ஈடுகட்ட முடியவில்லை. விளைச்சல் இருந்தும் போதிய விலை இல்லை.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.