Saturday, 30 June 2018

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த விஸ்வேஷ்வரய்யா இரும்பாலை தற்போது நஷ்டத்தில் இயங்கி வருகிறது.

பெங்களூரு : இரும்பு உற்பத்தியில் சர்வதேச அளவில் இந்தியா 5-வது இடத்தை பிடித்துள்ளது என சவுத்ரி பீரேந்திர சிங் தெரிவித்தார். பெங்களூருவில் நடைபெற்ற நுகர்வோர் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் சவுத்ரி பீரேந்திர சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: கடந்த காலங்களில் இந்தியாவில் இரும்பு உற்பத்தி குறைவாக இருந்தது. இதனால் வெளிநாடுகளில் இருந்து அதிகமாக இறக்குமதி செய்யப்பட்டது. அது தற்போது படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உற்பத்தியாகும் இரும்பு தரமாக இருப்பதால் அதை கட்டுமான பணிகள், மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் உட்பட உள்நாட்டு தேவைகளுக்கு அதிகமாக பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் இரும்பு உற்பத்தி அதிகமாக உள்ளது. இரும்பு உற்பத்தியில் சர்வதேச அளவில் நமது நாடு 5-வது இடத்தை பிடித்துள்ளது.  வரும் நாட்களில் இரும்பு உற்பத்தியில் சர்வதேச அளவில் இந்தியா முதலிடத்தை பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த விஸ்வேஷ்வரய்யா இரும்பாலை தற்போது நஷ்டத்தில் இயங்கி வருகிறது. 2 ஆயிரத்து 700 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. என்றாலும் பழமை வாய்ந்த இரும்பாலை என்பதால் அதை மூடாமல் புனரமைத்து ஒரு மில்லியன் டன் இரும்பு உற்பத்தி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.