ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு மகாராஷ்டிரா அரசு தடை விதித்துள்ளது. இது கடந்த 24ம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ளது. இதை எதிர்த்து வியாபாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, ஆன்லைன் நிறுவனங்கள் இந்த தடை உத்தரவில் இருந்து 3 மாதத்துக்கு விலக்கு பெற்றுள்ளன. ஆன்லைன் நிறுவனங்கள் இந்த தடை உத்தரவில் இருந்து 3 மாதத்துக்கு விலக்கு பெற்றுள்ளன. ஆன்லைன் மூலம் பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. இதில் பெங்களூரு, மும்பை, புனே, டெல்லி முக்கிய மையங்களாக உள்ளன. நாடு முழுவதும் நடைபெறும் ஆன்லைன் விற்பனையில் புனே, மும்பையின் பங்களிப்பு 25 சதவீதம் முதல் 30 சதவீதமாக உள்ளது. ஆன்லைன் நிறுவனங்கள் தங்கள் பேக்கேஜிங்கிற்கு பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களையே பயன்படுத்துகின்றன. மகாராஷ்டிரா அரசின் தடை உத்தரவால் ஆன்லைன் இவற்றுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு, புதிய விதிகளை பின்பற்ற அவகாசம் அளிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை தொடர்ந்து, மூன்று மாதம் அவகாசத்தை மகாராஷ்டிரா அரசு அளித்துள்ளது. இதுகுறித்து ஆன்லைன் நிறுவனங்கள் தரப்பில் கூறியதாவது: ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் பொருட்களை அனுப்ப பேக்கேஜிங் செய்வதற்கு பிளாஸ்டிக் பை உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களே பயன்படுத்தப்படுகின்றன. தற்போது மூன்று மாத அவகாசத்தை மகாராஷ்டிர அரசு அளித்துள்ளது.பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் பேக்கேஜிங் செலவு ஆன்லைன் ஆர்டர் மதிப்பில் 1 சதவீதம் முதல் 3 சதவீதம் ஆகிறது. புதிய விதிகளின்படி கார்ட்போர்டு பயன்படுத்துமாறு வலியுறுத்துகின்றனர். அவ்வாறு செய்தால் 30 சதவீதம் அல்லது அதற்கு மேல் ஆகிவிடும். இதனால் பொருட்களை அனுப்பும் கட்டணம் உயரும். ஆன்லைனில் பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காக ஆர்டர் செய்கின்றனர். இதனால்தான் ஷோரூம்களை விட சில பொருட்களின் விலை ஆன்லைனில் குறைவாக உள்ளது. அதோடு வீட்டில் இருந்தபடியே விரும்பிய பொருட்களை வாங்கலாம். பேக்கேஜிங் செலவு அதிகரித்தால் வாடிக்கையாளரிடம்தான் கூடுதல் தொகையை அனுப்புதல் கட்டணமாக வசூலிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். அதோடு, டெலிவரி கொடுப்பதும் தாமதம் ஆகும் என்றனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.