Tuesday, 12 June 2018

மனைவியின் ஏடிஎம் கார்டை கணவர் பயன்படுத்த கூடாது -SBI தகவல்!!

மனைவியின் ஏடிஎம் கார்டை கணவர் பயன்படுத்த கூடாது -SBI தகவல்!!

மனைவியின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி கணவர் பணம் எடுக்கக்கூடாது என வழக்கு ஒன்றில் எஸ்.பி.ஐ வங்கி தகவல்!!

பெங்களூரை சேர்ந்த வந்தனா மற்றும் ராஜேஷ் குமார் ஆகியோர் 2013-ம் ஆண்டு ஏடிஎம் கார்டை கணவரிடம் கொடுத்து பணம் எடுத்துவர கூறியுள்ளார். அவரது கணவர் அருகில் இருந்த எஸ்.பி.ஐ வங்கி ஏடிஎம் மையத்திற்கு சென்று பணம் எடுத்துள்ளார். ஆனால், ஏடிஎம்-ல் இருந்து பணம் வரவில்லை. பணம் எடுத்ததற்கான ரசீது மட்டும் வைத்துள்ளது.

 அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் உடனே எஸ்.பி.ஐ உதவி மையத்திடம் தொடர்பு கொண்டு இது பற்றி தெரிவித்துள்ளார். இதையடுத்து, அடுத்த நாள் வங்கி அலுலகத்திற்கு சென்றபோது, பணத்தை தர முடியாது என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நியாயம் கேட்டு பெங்களூரு நுகர்வோர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

இந்த வழக்கை இன்று விசாரணை செய்தது பெங்களூரு நுகர்வோர் நீதிமன்றம். வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், ஏடிஎம் கார்டின் ரகசிய எண்ணை கணவர், நெருங்கிய உறவினர்கள் என யாரிடமும் பகிரக்கூடாது எனக் கூறியது. வந்தனா தனது கணவரிடம் கசோலையோ அல்லது வங்கியில் பணம் எடுப்பதற்கான அங்கீகார கடிதத்தையோ வழங்கியிருக்கலாம் என்றும், ரகசிய எண்ணை வழங்கியது தவறு என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, மனைவியின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி கணவர் பணம் எடுக்கக்கூடாது; ஏடிஎம் கார்டுகளை சம்பந்தப்பட்ட நபர் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது விதி என எஸ்.பி.ஐ வங்கி தெரிவித்துள்ளது!

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.