நடப்பாண்டு ஏப்ரல் மாதத்துக்குள் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் (தபால் நிலைய வங்கி) 650 கிளைகள் திறக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாகத் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள அறிக்கையில், "2017ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி முதற்கட்டமாக சட்டிஸ்கர் மாநிலத்தின் ராய்பூர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி ஆகிய இரண்டு இடங்களில் திறக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் படி நாடு முழுவதும் மொத்தமாக 650 பேமெண்ட் வங்கிகள் திறக்கப்படவுள்ளது. இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்த பேமெண்ட் வங்கி பிற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட முன்மொழியப்படும். இந்த வங்கிகள் இந்த ஆண்டு ஏப்ரலுக்குள் செயல்படத் துவங்கும்" என்று தெரிவித்துள்ளார்.
வரும், 2018 மார்ச் மாதத்திற்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும், இந்திய போஸ்ட் பேமெண்ட் வங்கியின் சேவை கிடைக்கும். நிதியாண்டு இறுதிக்குள், நாட்டிலுள்ள 1.55 லட்சம் தபால் நிலையங்களிலும், வங்கிச் சேவையை வாடிக்கையாளர்கள் பெறலாம் என்று இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியான ஏ.பி.சிங் செப்டம்பர் மாதம் ஐ.நா கருத்தரங்கில் தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.