Saturday, 26 August 2017

தொழில்துறையில் செயற்கை நுண்ணறிவுஆலோசனை வழங்க 18 பேர் குழு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

பொருளாதார சீர்திருத்தங்களில் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை (ஏஐ)புகுத்துவது தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்கு 18 பேரடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் இதை அமைத்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஹார்ட்வேர் துறையில் மிகப் பெருமளவிலான மாற்றங்கள் உருவாகி வருகிறது. உலகம் தற்போது நான்காம் தலைமுறை தொழில்புரட்சிக்கு தயாராகி வருகிறது. அதிக தகவல் தொகுப்பு (பிக் டேட்டா), மிக அதிக அளவில் தகவல்களை சேமிக்கும் வசதி, செயற்கை நுண்ணறிவு, அனாலிடிக்ஸ் எனப்படும் பகுப்பாய்வு உள்ளிட்டவை தொழில்துறையில் குறிப்பாக உற்பத்தித் துறையில் டிஜிட்டல்மயமாக்கத்துக்கு வழிவகுத்துள்ளது.

இது தொடர்பாக ஆலோசனை வழங்கும் குழுவில் இத்துறை நிபுணர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளகள், தொழில்துறை தலைவர்கள் இடம்பெறுவர். குழு தனது அறிக்கையை அரசு மற்றும் தொழில்துறை மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு அளிக்கும் என்றும் கூறியுள்ளார். சென்னை ஐஐடி பேராசிரியர் வி காமகோடி இக்குழு வின் தலைவராக இருப்பார். ஹைடெக் ரோபோடிக்ஸ் சிஸ் டம் ஸ் லிமிடெடின் அனூஜ் கபூரியா,ஹெச்சிஎல் டெக்னாலஜியின் ஜி.ஹெச். ராவ் ஆகியோரும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

Keywords

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.