அரசு இ - சேவை மையங்களில், புதிதாக, 15 வகையான சான்றிதழ்கள் வழங்க, அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
தற்போது, அரசு இ - சேவை மையங்களில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், ஜாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்டவை, இணையதள சேவை வாயிலாக வழங்கப்படுகின்றன.இதேபோல், மேலும், 15 சான்றிதழ்கள், இணையதளம் வாயிலாக வழங்கப்படும் என, ஜூலை, 10ல், சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, விவசாய வருமான சான்றிதழ், சிறு, குறு விவசாயி சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், விதவை சான்றிதழ், வேலையில்லாதவர் சான்றிதழ் உள்ளிட்ட, 15 வகையான சான்றிதழ்கள், மின்னாளுமை திட்டத்தில், இ - சேவை மையங்கள் வழியாக வழங்க, அரசு அனுமதி அளித்துள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.