பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள காலக்கெடுவில் எவ்வித மாற்றமும் இல்லை என இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் திருத்தம் செய்யப்பட்ட நிதி மசோதாவின் படி, வருமான வரி கணக்கு தாக்கலின் போது ஆதார் எண் குறிப்பிடப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் வருமானவரி நிரந்தர கணக்கு எண்ணான பான் கார்டுடன் ஆதார்எண்ணை இணைப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனிடையே பான் எண்ணுடன் ஆதாரை இந்த மாத இறுதிக்குள் இணைக்க வேண்டும் என மத்திய அரசால் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இணைக்கப்படாவிட்டால் பான் எண்முடக்கப்படும் என்றும் வருமான வரி கணக்கு தாக்கலும் ஏற்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள காலக்கெடுவில் எவ்வித மாற்றமும் இல்லை என இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.