சரியான நேரத்தில் வரி தாக்கல் செய்வதினால் நீங்கள் பெரும் சலுகைகள் பற்றி நாம் இங்கே கானலாம்.
தாமதமாக வருமான வரி தாக்கல் செய்யும் முறை இருந்தாலும், சரியான நேரத்தில் வரி தாக்கல் செய்தவர்கள் அனுபவிக்கும் சலுகைகளை தாமதமாக வரி தாக்கல் செய்பவர்களால் பெற இயலாது.
புதிய விதிகள்
ஒருவர் இரண்டு வருடம் வரை தாமதமாக வரி தாக்கல் செய்யலாம் என்று இருந்த முறையில் சென்ற பட்ஜெட்டில் இருந்து மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
புதிய விதிகளின் படி தாமதமாக வரி தாக்கல் செய்யும் முறை ஒரு வருடமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதி ஏப்ரல் 2017 முதல் அமலுக்கு வர இருக்கிறது.
இழப்புகளை முன்னெடுத்துச் செல்லுதல்
இழப்புகளை முன்னெடுத்துச் செல்லுதல் எதிர்கால மூலதன ஆதாயங்களைப் பொருத்து எட்டு வருடங்கள் வரை முன்னெடுத்துச் செல்லலாம்.
ஆனால் இது நீங்கள் சரியான நேரத்தில் வரி தாக்கல் செய்தால் மட்டுமே. நீங்கள் தாமதமாக வரி தாக்கல் செய்யும் போது இழப்புகளை முன்னெடுத்துச் செலுத்த முடியாது.
பணத்தைத் திரும்ப பெறுவதில் தாமதம்
உங்களது வரி கோரிக்கை நிலுவையில் இருந்து, நீங்கள் அதிக வரியைச் செலுத்தி இருந்தால் நீங்கள் அவற்றைத் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். வரித் துறை திருப்பி அளிக்க வேண்டியத் தொகையில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால் அவற்றை வட்டியுடன் திருப்பி அளிக்கும்.
நீங்கள் வருமான வரியைத் தாமதமாக தாக்கல் செய்யும் பொழுது இந்த வட்டி தொகை உங்களுக்குக் கிடைக்காது.
வருமான சான்று
நீங்கள் வரி தாக்கல் செய்ததை உங்கள் வருமான சான்றாக பயன்படுத்தலாம். வங்கியில் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது
வருமான சான்றாக இதைச் சமர்ப்பிக்கலாம் அல்லது நீங்கள் விசா விண்ணப்பிக்கும் போது உங்கள் நிதி நிலை அறிந்துகொள்ளத் தேவைப்படலாம்.
அபராதத்தைத் தவிர்த்தல்
வரி தாக்கல் செய்யத் தாமதம் செய்யும் போது நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு மாதத்திற்கும் வட்டியாக 1% நீங்கள் கூடுதலாக செலுத்த வேண்டி வரும்.
மேலும் நீங்கள் வருமான வரி தக்கல் செய்யத் தவறிய போது ரூ. 5,000 வரை அபராதம் விதிக்கக் கூடும். நீங்கள் வருமான வரி தாக்கலை தவிர்த்துக் கொண்டே சென்றால் அதிகபட்ச அபராதங்கள் அல்லது உங்கள் மீது வழக்கு தொடரவும் வாய்ப்பு உள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.