Monday, 28 August 2017

ஒரே சமயத்தில் தேர்தல்: 'நிடி ஆயோக்' ஆதரவு

புதுடில்லி: வரும், 2024 முதல், நாடு முழுவதும், லோக்சபா, சட்டசபை தேர்தல்களை ஒரே
சமயத்தில் நடத்த, 'நிடி ஆயோக்' அமைப்பு, ஆதரவு தெரிவித்துள்ளது.
மத்திய அரசுக்கு, திட்டங்களை உருவாக்குவது தொடர்பாக ஆலோசனை அளித்து வரும் அமைப்பான, 'நிடி ஆயோக்' சமீபத்தில், அறிக்கை ஒன்றை, மத்திய அரசிடம் சமர்ப் பித்துள்ளது.அதில் கூறப்பட்டு உள்ளதாவது:

நாட்டின் நலன் கருதி, 2024 முதல், நாடு முழுவதும் ஒரே சமயத்தில், லோக்சபா, சட்டசபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்;
இந்த தேர்தல்களை, இரு கட்டமாக நடத்த லாம். இதை நிறைவேற்ற, ஒரு சில மாநிலங் களில் சட்டசபைத் தேர்தல்களை முன் கூட்டியோ அல்லது சற்று காலந்தாழ்த்தியோ நடத் தப்பட வேண்டி இருக்கும்.

தேர்தல்களை ஒரே சமயத்தில்நடத்துவதற்கான வழி, வகைகளை ஆராய, அரசு அதிகாரிகள், நிபுணர் கள், சிந்தனையாளர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட வேண்டும். அனைவரும் ஒப்புக் கொள்ளத்தக்க நடைமுறையை உருவாக்கி, தேவை யான சட்ட திருத்த மசோதா தயாரித்து நிறைவேற் றப்பட வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
'நாடு முழுவதும் ஒரே சமயத்தில், லோக்சபா, சட்டசபை தேர்தல்களை நடத்த வேண் டும்' என, பிரதமர், நரேந்திர மோடி குரல் கொடுத்து வருகிறார். அதே கருத்தை, முன்னாள் ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜியும் வலியுறுத்தி வந்தார். இந்நிலையில், அந்த கருத்துக்கு, நிடி ஆயோக் அமைப்பும் வலு சேர்த்துள்ளது.

என்ன பயன்?

கடந்த, 2009, லோக்சபா தேர்தல் செலவு, 1,100 கோடி ரூபாயாக இருந்தது. 2014ல், இது, 4,000 கோடி ரூபாயாக அதிகரித் தது. மேலும், நாடு முழுவதும், தேர்தல் பணி களில், ஒரு கோடி அரசு ஊழியர்கள் ஈடுபடுத் தப்பட்ட னர். இதேபோல், ஒவ்வொரு தேர்த லுக்கும், அதிகஅளவில் பணம் செலவிடப்படு வதால், அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுகிறது. லோக்சபா, சட்டசபைத் தேர்தல்களை ஒரே சமயத்தில் நடத்துவதால், பெருமளவில் நிதி மிச்சமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.