₹ கறுப்பு பணத்தை மீண்டும் ஒழிக்கும் விதமாக, புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2000 ரூபாய் வாபஸ் பெற இருப்பதாகவும், அதே நேரத்தில் மீண்டும் 1000 ரூபாய் நோட்டை வெளியிட மத்திய அரசு தயாராகி வருவதாகவும் தலைநகர் வட்டார தகவல்கள் கூறுகின்றன.
₹ இந்திய அரசு கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி நாட்டின் உயர்மட்ட மதிப்பிலான நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. திடீரென எடுக்கப்பட்ட இந்த உயர் பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் நாட்டிலுள்ள மக்கள் பெரும்பாலோனோர் பெரும் அவதிக்கு உள்ளாகினர். மக்களின் அவதிகளை போக்குவதற்காக, மத்திய அரசு உடனடியாக தற்காலிக நடவடிக்கையாக குறைந்த அளவில் புதிதாக 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சடித்து புழக்கத்திற்கு விடப்பட்டன.
₹ புதிய புதிதாக 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சடித்து புழக்கத்திற்கு விடப்பட்டாலும், சாதாரண மக்களுக்கு 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையிலான குறைந்த மதிப்புடைய நோட்டுக்கள் மற்றும் புழக்கத்திற்கு விடப்பட்ட புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களும் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது.
₹ இந்த சூழ்நிலையில் மக்களின் சிரமங்களை போக்கும் வகையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று புதிய 50 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது குறிப்பிடதக்கது. புதிய 200 ரூபாய் நோட்டுகள் நாட்டின் முக்கிய நகரங்களில் அன்றே புழக்கத்துக்கும் வந்தது.
1000 ரூபாய் நோட்டுகள் :
₹ இதனை தொடர்ந்து தற்போது புதிதாக 1000 ரூபாய் நோட்டுகள் வெளியிடபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
₹ சமீபத்தில் புதிய 200 ரூபாய் மற்றும் 50 ரூபாய் நோட்டும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய 1000 ரூபாய் நோட்டை மீண்டும் வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
₹ புதிய பாதுகாப்பு அம்சங்களுடன், புதிய கலரில் மீண்டும் 1000 ரூபாய் நோட்டு வெளிவரக்கூடும் என்று ரிசர்வ் வங்கி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
₹ மத்திய அரசின் உத்தரவின்பேரில், புதிய 1,000 ரூபாய் நோட்டுக்கான வடிவமைப்பு, காகிதம், அச்சிடுதல் போன்ற பணிகள் முழுவீச்சாக நடைபெற்று வருவதாகவும், இதற்கான பணிகள் இன்னும் ஓரிரு மாதத்திற்குள் முடிவடைந்துவிடும் என்றும், அதைத்தொடர்ந்து வரும் 2018ம் ஆண்டு புதிய 1000 ரூபாய் வெளியிடப்படும் என்றும் அதிகாரிகள் கூறியதாக தலைநகர் டெல்லி வட்டார தகவல்கள் வெளியாகி உள்ளது.
₹ 100 மற்றும் 500 நோட்டுக்கு இடையே சில்லரை வசதிக்காக 200 நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது போல, 500 மற்றும் 2000 நோட்டுக்கு இடையே 1,000 நோட்டு மீண்டும் வெளியிடப்படுகிறது. புதிய 500, 2000, 200 ரூபாய் நோட்டு போல முற்றிலும் புதிய வடிவில் இப்புதிய 1000 ரூபாய் நோட்டுகள் வெளிவரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
₹ புதிய நோட்டுக்கள் டிசம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் என்றும் இந்த நோட்டுக்கள் அனைத்தும் மைசூரு மற்றும் சல்போனியில் அச்சடிக்கப்பட உள்ளது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
2000 ரூபாய் நோட்டுகள் :
₹ 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் இடையில் உள்ள நீண்ட இடை வெளியின் காரணமாக ஏற்பட்டுள்ள சில்லரை தட்டுப்பாட்டை குறைக்கும் விதமாக மீண்டும் 1000 ரூபாய் நோட்டை அறிமுகம் செய்யப்படுகிறது என்று தவல்கள் வெளியாகியுள்ளது.
₹ அதே நேரத்தில், தற்போது புழக்கத்தில் இருந்து வரும் புதிய 2000 ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
₹ பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் மத்திய அரசு மீண்டும் இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
₹ சமீபத்தில் புதிய 50 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது குறிப்பிடதக்கது. விரைவில் புதிய 1000 ரூபாய் நோட்டுகளும் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.