Saturday, 26 August 2017

சேவைத்துறை வளர்ச்சிக்கு தனி முகமை: அசோசேம் வலியுறுத்தல்

சேவைத்துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்க மத்திய அரசு தனி முகமையை உருவாக்க வேண்டும் என்று தொழில்துறை கூட்டமைப்பான அசோசேம் வலியுறுத்தியுள்ளது. `மீண்டு எழும் இந்தியா’ என்ற அசோசேமின் ஆய்வுக் கட்டுரையில் இது தொடர்பாக மேலும் கூறியிருப்பதாவது:

இப்போதைய சூழலில் அரசு ஒரு இணைப்பு நிறுவனம் அல்லது துறையை உருவாக்குவதன் மூலம் சேவைத் துறையின் செயல்பாடுகள் மிகச் சிறப்பானதாக இருக்கும்.

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு சேவை அளிக்கும் வாய்ப்பை விரிவுபடுத்த வேண்டுமெனில் அதற்குரிய மேம்பாடு மற்றும் சந்தை உத்திகள் வகுக்கப்பட வேண்டும்.

குறிப்பாக சேவைத் துறைக்கு தனி இணையதளம் மற்றும் இந்தியாவில் கிடைக்கும் சேவைகள் குறித்த விவரங்கள் கண்காட்சிகள் மூலம் வெளி உலகுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தவிர, மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் இத்துறைக்கு கட்டுபடியாகும் வட்டி விகிதத்தில் கடன் கிடைக்க வழிவகை செய்வதன் மூலம் இத்துறை வளர்ச்சியடையும்.

இத்துறையானது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) கணிசமான பங்களிப்பை அளிக்கிறது. அத்துடன் வேலை வாய்ப்பு மற்றும் அந்நிய நேரடி முதலீடு உள்ளிட்டவற்றை ஈர்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் சேவை அளிப்பதாக குறிப்பாக பயணம், போக்குவரத்து, மருத்துவ வசதி, கல்வி, தொடர்புத்துறை, நிதிச் சேவைகளிலும் சேவைத்துறை செயல்படுவதாக அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

-பிடிஐ

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.