Tuesday, 29 August 2017

பழநி உண்டியலில் ஒரு மாதத்தில் எவ்வளவு வசூல் தெரியுமா?

பழநி முருகன்கோயில் உண்டியலில், ஒரு மாதத்தில் ரூ. ஒரு கோடியே 85 லட்சத்து 57ஆயிரம் வசூலாகியுள்ளது. 

பழநி மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. அதில் தங்கம் 876 கிராம், வெள்ளி 8.250 கிலோ வெளிநாட்டு கரன்சிகள்-951, ரொக்கம் ரூ. ஒரு கோடியே 85 லட்சத்து 57ஆயிரத்து 158 கிடைத்துள்ளது. இப்பணியில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா, திண்டுக்கல் உதவி ஆணையர் சிவலிங்கம், கோயில் பணியாளர்கள், வங்கிப் பணியாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.