சொகுசு கார்களுக்கு, தற்போது உள்ள கூடுதல் வரியை, 15 சதவீதத்தில் இருந்து, 25 சதவீதமாக உயர்த்த, மத்திய அரசு, அவசர சட்டம் பிறப்பிக்க உள்ளது. இதனால், நடுத்தர, பெரிய, சொகுசு கார்களின் விலை உயரும்.
ஜூலையில் அறிமுகமான, ஜி.எஸ்.டி., முறையில், பன்முக பயன்பாட்டு கார், நடுத்தர, பெரிய கார் ஆகியவற்றுக்கு, 28 சதவீத வரி விதிக்கப்பட்டு உள்ளது. இத்துடன், அதிகபட்சமாக, ௧5 சதவீத கூடுதல் வரியும் உள்ளது.
இழப்பீடு குறையும்:
ஜி.எஸ்.டி.,யால், மாநிலங்களுக்கு ஏற்படும் வரி இழப்பை ஈடுசெய்ய, கூடுதல் வரி வசூலிக்கப்படுகிறது. இதன்படி, மேற்கண்ட கார்களுக்கான மொத்த வரி, தற்போது, 43 சதவீதமாக உள்ளது. இது, முந்தைய பலமுனை வரி திட்டத்தில், 52 – 54.72 சதவீதம்; கூடுதலாக, 2.5 சதவீத மத்திய விற்பனை வரி, ஆயத்தீர்வை ஆகியவற்றை கொண்டதாக இருந்தது.
ஜி.எஸ்.டி.,யில், வரிச்சுமை குறைந்ததால், பெரிய, சொகுசு கார்கள் விலை, 1 – 3 லட்சம் ரூபாய் வரை குறைந்தது. அதே சமயம், இந்த விற்பனையில், கூடுதல் வரி குறைவதால், மாநிலங்களுக்கான இழப்பீடு குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, ஆக., 5ல், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில், டில்லியில், ஜி.எஸ்.டி., குழு கூட்டம் நடைபெற்றது. அதில், பன்முக பயன்பாட்டு கார், நடுத்தர, பெரிய, சொகுசு கார் ஆகியவற்றுக்கான அதிகபட்ச கூடுதல் வரியை, 15லிருந்து, 25 சதவீதமாக உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டது. இது தொடர்பாக, ஜி.எஸ்.டி., சட்டத்தில் திருத்தம் செய்ய, மத்திய அரசுக்கு பரிந்துரைப்பது என, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
வரி உயர்வு:
இது குறித்து, நிதியமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது: கார்களுக்கான கூடுதல் வரியை உயர்த்த, மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்க வகை செய்யும், ஜி.எஸ்.டி., சட்டம், பிரிவு – 8ல் திருத்தம் செய்ய வேண்டும். மத்திய அமைச்சரவைக் குழு, செப்., 9ல் கூட உள்ளது. அதில், ஜி.எஸ்.டி., கவுன்சில் அளித்த பரிந்துரைப்படி, கூடுதல் வரி உயர்வுக்கான சட்டத்திருத்தம் குறித்து ஆலோசிக்கப்படும். அதற்கு முன், வரியை உயர்த்துவது தொடர்பாக, நெடுஞ்சாலை, போக்குவரத்து, கனரக தொழில் உள்ளிட்ட அமைச்சகங்களிடம் ஆலோசனை கேட்கப்படும். இதையடுத்து, அவசர சட்டம் மூலம், கார்களுக்கான கூடுதல் வரி உயர்த்தப்படும் என, தெரிகிறது.
பார்லி., கூடும் போது தான், ஒரு சட்டத்திற்கு ஒப்புதல் பெறவோ அல்லது சட்டத்தில் திருத்தம் செய்யவோ முடியும். பார்லி., கூட்டம் நடைபெறாத காலத்தில், அவசர சட்டம் மூலம், அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். எனினும், அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள், பார்லிமென்டின் ஒப்புதல் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.