தென் கொரியாவில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளியை இறக்குமதி செய்ய வெள்ளிக்கிழமை முதல் இந்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த முடிவு அன்மையில் வரி மாற்றம் செய்யப்பட்ட பிறகு சுங்க வரியைக் குறைக்க உதவுவதினால் எடுக்கப்பட்டுள்ளது.
சீனாவிற்கு அடுத்தபடியாகத் தங்கம் இறக்குமதியில் இரண்டாம் இடத்தினைப் பிடித்திருப்பது இந்தியாவாகும்.
இறக்குமதி வரி
தங்கம் மற்றும் வெள்ளியை இறக்குமதி செய்ய 10 சதவீத இறக்குமதி வரி விதித்திருக்கும் போதிலும் சில நாடுகளுடன் இந்தியாவிற்கு இலவச வர்த்தக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இலவச இறக்குமதி வரி
மத்திய அரசு தென் கொரியாவுடன் போட்டுள்ள ஒப்பந்தத்தினால் இலவசமாக வணிகம் செய்ய முடியும். இதனால் இறக்குமதி வரி குறையும். இலவச இறக்குமதியைக் குறைப்பதற்காக மத்திய அரசு சதவீதம் சுங்க வரியை விதித்தது.
ஜிஎஸ்டி
ஆனால் அது ஜூலை 1 முதல் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி அமலுக்கு வரும் போது நீக்கப்பட்டது.
வர்த்தக நிறுவனங்கள்
ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு சில வர்த்தக நிறுவனங்கள் இறக்குமதி வரி இல்லாமல் தென் கொரியாவில் இருந்து தங்கத்தினை இறக்குமதி செய்யத் துவங்கியுள்ளனர்.
தடை
ஆனால் தங்கம் மற்றும் வெள்ளியைத் தென் கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யும் போது வரி உண்டு, எனவே இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.