ஐசிஐசிஐ வங்கி புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தங்களது வங்கி கிளைகளில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் ஆவணங்கள் ஏதும் இல்லாமல் இன்ஸ்டண்ட் கிரெடிட் கார்டினை விண்ணப்பித்துப் பெறலாம் என்று கூறியுள்ளது.
இந்திய வங்கித் துறை வரலாற்றில் ஒரு வங்கி நிறுவனம் இதுபோன்ற திட்டத்தினை முதல் முறையாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கார்டு கைகளுக்கு வரும் முன்பே ஷாப்பிங் செய்யலாம்?
ஐசிஐசிஐ வங்கியின் இன்ஸ்டண்ட் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்களது விவரங்களை உள்ளிட்டு எளிமையாகக் கிரெட்ட் கார்டு பெறுவதுடன் உங்களது கார்டு கைகளுக்கு வரும் முன்பே கார்டின் விவரங்கள் பெற்று இ-காமர்ஸ் தளங்களில் ஷாப்பிங் செய்யலாம்.
விருப்பமான கார்டினை தேர்வு செய்யலாம்
மேலும் இந்தத் திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான கார்டினை தேர்வு செய்து பேற்றுக்கொள்ளாம் என்றும் கடனையும் உடனே பெறலாம் என்று ஐசிஐசிஐ வங்கி கூறியுள்ளது.
அதிகபட்ச கடன் வரம்பு
24 மணி நேரமும் இன்ஸ்டண்ட் கிரெடிட் கார்டு சேவையினைப் பயனப்டுத்தி கிரெடிட் கார்டுக்கும் இணையதள வங்கி சேவை மூலம் விண்ணப்பிக்க முடியும். இந்தக் கார்டுகளுக்கு அதிகபட்சம் 4 லட்சம் ரூபாய் வரையில் கிரெடிட் வரம்பும் அளிக்கப்படுகின்றது.
விண்ணப்பத்தை அங்கீகரிக்கக் கூடுதல் சேவை
விண்ணப்பப் படிவத்தை அங்கீகரிக்கக் கூடுதலாகச் சில சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மும்பையினைச் சேர்ந்த ஐசிஐசிஐ வங்கி கிளை கூறியது.
விண்ணப்பம் எங்குக் கிடைக்கும்?
தற்போது இந்த இன்ஸ்டண்ட் கிரெடிட் கார்டு சேவை இணையதள வங்கி சேவை மூலமாக மட்டுமே அளிக்கப்படுகின்றது. விரைவில் ஐமொபைல், மொபைல் வங்கி கணக்கு செயலி உள்ளிட்டவையிலும் அளிக்கப்படும்.
இன்ஸ்டண்ட் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
ஐசிஐசிஐ வங்கியின் இன்ஸ்டண்ட் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் முதலில் தங்களது இணையதள வங்கி கணக்கை திறக்க வேண்டும். மேலும் அதில் கிரெடிட் கார்டு சேவை என்பதைத் தேர்வு செய்து புதிய கார்டுக்கு விண்ணப்பிக்க உள்ள இணைப்பினை கிளிக் செய்ய வேண்டும்.
விவரங்களைச் சரி பார்த்தல்
பின்னர் எந்தக் கார்டு வேண்டும் என்பதைத் தேர்வு செய்து, உங்களது சரியான விவரங்களை உள்ளிட்டுப் படிவத்தைச் சமர்ப்பிக்க வெண்டும்.
ஓடிபி
பின்னர் இணையதள வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு உள்ள மொபைல் எண்ணிற்கு ஒரு முறை கடவுச் சொல் ஒன்று அனுப்பப்படும். அதனை உள்ளிட்டு ஜெனரேட் கார்டு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் இன்ஸ்டண்ட் கிரெடிட் கார்டு தயாராகிவிடும்.
முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது. இப்போதே இன்சுரன்ஸ் எடுங்கள்
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.