Tuesday, 22 August 2017

'இலவச' வருமான வரி தாக்கல் சேவை வழங்கும் இணையதளம்..!

வருமான வரியை நீங்கள் இன்னும் தாக்கல் செய்யவில்லையா..? யாருக்கெல்லாம் வருமான வரி பொருந்தும்..? எத்தனைச் சதவீதம் வரி கட்ட வேண்டும்..? வருமான வரி தக்கல் செய்ய இலவச சேவை ஏதேனும் உண்டா..? இப்படி பலரிடம் பல கேள்விகள் இருக்கும். காரணம் ஜூலை 31ம் தேதிக்குள் வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும்.

நீங்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் இக்கட்டுரையில் பதில் உள்ளது.
இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் வருமான வரி தாக்கல் செய்யும் அனைத்து பணிகளையும் நாம் உட்கார்ந்த இடத்தில் இருந்தே எளிமையாக செய்ய முடியும். அப்படி இங்கு பட்டியலிடப்பட்டுள்ள சில இணைய தளங்கள் இலவச வருமான வரி தாக்கல் சேவை மற்றும் உதவியை அளிக்கின்றன.

எச்ஆர் பிளாக் (HR Block)

இது ஒரு மிக பிரபலாமான இணையதளம்.
இந்தத் தளத்தில் உள்ள வசதி, உங்களது ஃபார்ம் 16 தகவல்களைத் தானாக தனது உரை புலத்தில் எடுத்துக்கொண்டு வரி தாக்கல்-க்கான அனைத்து தகவல்களை பெற்றுக்கொள்ளும். இதனால் உங்களது நேரத்தை பெருமளவில் மிச்சமாக்கும்.
அதுமட்டும் இல்லாமல், உங்களுக்கு இந்த இணையதள குழுவில் இருந்து உதவிக்கான அழைப்பு வரும் மற்றும் உங்கள் தரவுகள் மிகவும் பாதுகாப்பான என்கிரிப்ஷன் முறையில் பாதுகாக்கப்படும். தாக்கல் செய்யப்பட்ட 24x7 மணி நேரத்தில் உங்களுக்கான விவரங்களை பெறுவதற்கான அனுமதி வழங்கப்படும்.


கிளியர்டாக்ஸ்

வருமான வரி தாக்கல் செய்வதற்கு இலவச சேவையை கிளியர்டாக்ஸ்(Cleartax) இனையத் தளம் அளிக்கும்.
இந்த இணையதளத்தின் மூலம் தாக்கல் செய்ய உங்கள் மின்னஞ்சல் மற்றும் கடவுச்சொல் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும். இதில் உள்ள ஒரு இலவச மின்பொருளைப் பயன்படுத்தி உங்கள் வருமான வரியைச் சுலபமாக தாக்கல் செய்யலாம்.

டாக்ஸ் ஸ்பேனர்

டாக்ஸ் ஸ்பேனர்(Tax Spanner) இணையதளம் இலவச சேவை வழங்குவது இல்லை. உங்கள் வருமான வரி தாக்கலுக்கு ஏற்றார் போல கட்டணங்கள் செலுத்த வேண்டியிருக்கும். இந்தத் தளம் உங்களுக்கு 10 நிமிடத்தில் வரி தாக்கல் செய்வதாக உறுதி அளிக்கிறது.

டாக்ஸ் ஸ்மைல்

டாக்ஸ் ஸ்மைல் (Tax Smile) உங்கள் வருமானம் ரூ. 5 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் போது இலவசம் ஆகும். உங்கள் ஃபார்ம் 16-ஐ ஏற்ற மட்டும் சில கட்டணங்கள் விதிக்கப்படும். பின்னர் சுலபமாக வரி தாக்கல் செய்து விடலாம்.

விட்டெனா

விட்டெனா (Vittena) இந்திய அரசு அங்கீகாரம் பெற்ற இடைத்தரகர் மற்றும் பெருநிறுவன தணிக்கையாளர் பிரதிநிதித்துவம் உள்ள தளம். இந்த நிறுவனம் சந்தைக்கு புதிது.
இது இலவச சேவை அளிப்பதல்ல. ஆனால் மலிவானது.

இந்திய அரசாங்கத்தின் இணையதளம்

வருமான வரி தாக்கல் செய்ய வருமான வரி இணையதளத்தில் நீங்கள் உள்நுழைய வேண்டும்.
இந்த இணையதளம் நிறைய மாற்றங்களுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் வழங்கிகள் துரிதமாக செயல்படுகின்றன. அதுமட்டும் இல்லாமல் ஹெல்ப்லைன் வசதியும் உள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.