இன்று இளைஞர் மத்தியிலும், தொழில்நுட்ப சந்தையிலும் டிரோன் என்பது அனைவரையும் கவரும் ஒன்றாக மாறிவருகிறது. இதன் பயன்பாட்டில் பல பிரச்சனைகள் இருந்தாலும், சந்தையில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் இதனை எப்படி தனது வர்த்தகத்திற்கு பயன்படுத்துவது என்பதையே யோசித்து வருகிறது.
இத்தகைய டிரோனை பல்வேறு வகையில் தொடர்ந்து மேம்படுத்தி வரும் ஒரு நிறுவனம் தான் DJI. இந்நிறுவனத்தின் நிறுவனர் தான் பிரான்ங் வாங் டாவ்.
போர்ப்ஸ்
சமீபத்தில் போர்ப்ஸ் பத்திரிக்கை டெக்னாலஜி துறையில் இருக்கும் பணக்காரர்கள் பட்டியலை உலகளவில் ஆய்வு செய்து வெளியிட்டது.
இப்பட்டியலில் பிராங்க் வாங் டாவ் 3.2 பில்லியன் டாலர் அதாவது 20,500 கோடி ரூபாய் உடன் 76வது இடத்தை பிடித்துள்ளார். இதில் என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்.
இளமையான பில்லியனர்
ஆசியாவிலேயே மிகவும் குறைந்த வயதில் டெக் துறையில் பில்லியனர் என்ற அந்தஸ்தை பெற்றது பிராங்க் வாங் டாவ் மட்டுமே. இந்தியாவில் இருந்து யாருமே இல்லையா என்றால்,
இப்பட்டியில் இரண்டு இந்தியர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். ஒன்று விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜி, மற்றொன்று எச்சிஎல் நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார்.
DJI
11 வருடங்களுக்கு முன்பு பிராங்க் வாங் டாவ், ஹாங்காங் சையின்ஸ் மற்றும் டெக்னாலஜி பல்கலைகழகத்தில் படித்துக்கொண்டு இருக்கும்போது இந்நிறுவனம் துவங்கப்பட்டது. இதன் பின் ஷென்சென் அருகில் உற்பத்தி தளத்தை அமைத்தார் பிராங்க் வாங் டாவ்.
உலகளாவிய சந்தை
இன்று டிரோன் சந்தையில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கும் செலுத்தும் நிறுவனம் என்றால் அது DJIதான். இந்நிறுவனம் உலகம் முழுவதும் இணையம் வாயிலாகவே தனது வர்த்தகத்தை செய்து வருகிறது.
விலை
இந்நிறுவனத்தின் ஒரு டிரோன் விலை 1000 டாலருக்கும் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.