சர்ஜிகல் ஸ்டிரைக் எனப்படும், ராணுவத்தின் துல்லியமான அதிரடி தாக்குதல் நடவடிக்கைகள், இதற்கு முன் நடந்ததற்கான எந்த ஆவணங்களும், ஆதாரங்களும் இல்லை' என, ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த, பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது, சர்ஜிகல் ஸ்டிரைக் எனப்படும் துல்லியமான தாக்குதலை, நம் ராணுவம், 2016, செப்., 29ல் நடத்தியது. இதில், அந்த முகாம்கள் அழிக்கப்பட்டன; 20க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த சர்ஜிகல் ஸ்டிரைக் தாக்குதல் குறித்தும், இதற்கு முன் நடந்த தாக்குதல்கள் குறித்தும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கோரப்பட்டிருந்தது. இதற்கு, டி.ஜி.எம்.ஓ., எனப்படும் ராணுவ நடவடிக்கைகளுக்கான டைரக்டர் ஜெனரல் அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது:
ராணுவத்துக்கு கிடைத்த ரகசிய தகவல்கள் அடிப்படையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், 2016, செப்., 28 நள்ளிரவு முதல், செப்., 29 அதிகாலை வரை, நம் ராணுவம் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது. இதில், நம் நாட்டின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த, பயங்கரவாதிகளின் முகாம் அழிக்கப்பட்டது. இதைத் தவிர, இதற்கு முன், இதுபோன்ற சர்ஜிகல் ஸ்டிரைக் தாக்குதல் நடந்ததற்கான எந்த ஆவணங்களோ, ஆதாரங்களோ இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.