Tuesday, 29 August 2017

ஜன் தன் வங்கிக் கணக்குகள் எண்ணிக்கை 30 கோடி

ஜன் தன் வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை 30 கோடியை எட்டியுள்ளதாகவும், கணக்குகளில் 65 ஆயிரம் கோடி ரூபாய் இருப்பு உள்ளதாகவும் பிரதமர் மோடிதெரிவித்துள்ளார். ஜன் தன் திட்டம் தொடங்கப்பட்டு 3 ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
ஜன் தன் திட்டத்தின் பயன் குறித்து வங்கிகள் தரப்பில் ஆய்வு நடத்தப்பட்டதாக கூறியுள்ள பிரதமர், அரசின் உயிர்க் காப்பீடு மற்றும் விபத்துக் காப்பீடு திட்டங்கள், ரூபே டெபிட் கார்டு போன்ற வசதிகளை ஏழை எளிய மக்கள் பெற ஜன்தன் வங்கிக் கணக்கு உதவுவது ஆய்வில் தெரிய வந்ததாகவும் கூறியுள்ளார். குறுகிய காலத்தில் 30 கோடி பேர் வங்கி சேவைக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், இந்த எண்ணிக்கை பல நாடுகளின் மக்கள்தொகையை விட அதிகம் என்றும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
x

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.