Saturday, 26 August 2017

வாடிக்கையாளர்களிடம் கூடுதலாக ரூ.3 கோடி வசூலித்த ஐடியா

வாடிக்கையாளர்களிடம் கூடுதலாக வசூலித்த 2 கோடியே 97 லட்சம் ரூபாயை தங்களிடம் டெபாசிட் செய்யுமாறு ஐடியா நிறுவனத்துக்கு டிராய் உத்தரவிட்டுள்ளது.

இந்தத் தொகை, வாடிக்கையாளர் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு நிதியில் சேர்க்கப்படும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தெரிவித்துள்ளது. 2005 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் கூடுதல் தொகையை ஐடியா வசூலித்ததாக டிராய் தெரிவித்திருந்தது. கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களைக் கொண்டு இந்திய தொலைத்தொடர்பு துறையில் முன்னணி நிறுவனமாக ஐடியா நிறுவனம் திகழ்ந்து வருகிறது. இந்நிலையில், கூடுதலாக வசூலித்த 2 கோடியே 97 லட்சம் ரூபாயை தங்களிடம் டெபாசிட் செய்யுமாறு ஐடியா நிறுவனத்துக்கு டிராய் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.