பேடிஎம் நிறுவனம் நிறுவன, 2017 மே மாதம் வெளியிட்ட அறிவிப்பில் இந்த வருடத்தில் பேமெண்ட்ஸ் வங்கி சேவை முழுமையாகப் பயன்பாட்டிற்கு வரும் என்று அறிவித்து இருந்தது. இத்தினை நாட்களாக வாடிக்கையாளர்கள் வங்கி சேவைகளை விரும்புகின்றார்களா என்று ஆராய்ந்து வந்த நிலையில் தற்போது சேவையினைத் துவங்கியுள்ளது.
ஆனால் இந்தச் சேவை பேடிஎம் பீட்டா ஆப் வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். எனவே பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி சேவையினைப் பயன்படுத்த விரும்புபவர்கள் பேடிஎம் பீட்டா 6.0 பதிப்பை மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
தேவையான ஆவணங்கள்
பேடிஎம் பேமெண்ட் வங்கியில் சேமிப்புக் கணக்கினை துவங்க விரும்புபவர்கள் முதலில் ஆதார் கார்டு எண் மற்றும் பான் கார்டு எண் போன்ற வாடிக்கையாளர் அடையாள ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆவணங்கள் இல்லை என்றால்?
உங்களது பேடிஎம் கணக்கில் வாடிக்கையாளர் அடையாள ஆவணங்களைச் சமர்ப்பித்து அனுமதி பெறவில்லை என்றால் வங்கி சேவையினைப் பயன்படுத்த முடியாது.
சேமிப்பு கணக்கு
ஏற்கனவே ஆதார், பான் கார்டு விவரங்களைப் பேடிஎம் செயலில் சமர்ப்பித்துச் சரிபார்ப்பு அனுமதியினைப் பெற்றவர்களுக்குப் பேடிஎம் செயலியின் பிரோபைல் பக்கத்தில் எனது சேமிப்பு கணக்கு என்ற தெரிவு இருக்கும்.
KYC ஆவணங்கள் சரிபார்ப்பு
ஆவணங்கள் சரிபார்ப்பை சரி செய்யாதவர்களுக்கு உங்களது KYC விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவு இருக்கும்.
அங்கு உங்களது ஆதார் விவரங்களை உள்ளிட்டுத் தொடர்ந்து அருகில் உள்ள பேடிஎம் சேவை வழங்குநர் அல்லது துறையில் நிர்வாகியை நீங்கள் இருக்கும் இடத்திற்கு வர வழைத்துக் கைரேகை பதிவை அளிப்பதன் மூலம் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியில் சேமிப்புக் கணக்கைத் துவங்க முடியும்.
ரூபே டெபிட் கார்டு
உங்களது பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் சேமிப்புக் கணக்கைத் துவங்கிய உடன் உங்களுக்கு விருச்சுவல் ரூபே டெபிட் கார்டு சேவை அளிக்கப்படும். சேமிப்பு கணக்கு எண் உங்களது மொபைல் எண் ஆகும்.
வடிவம்
பேமெண்ட்ஸ் வங்கி சேவை பிரிவில் வாலெட்டில் உள்ள தொகை, சேமிப்புக் கணக்கில் உள்ள தொகை போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
முந்தைய அறிவிப்பு
பேடிஎம் சேமிப்பு கணக்கு மற்றும் வாலெட்டில் உள்ள பணத்தினை இணைக்கும், வாலெட்டில் உள்ள தொகை அனைத்தும் சேமிப்பு கணக்கு மாற்றப்படும் என்று மே மாதம் கூறியது. ஆனால் தற்போது அனைத்தும் தனித் தனியாக உள்ளது.
பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி சேமிப்பு கணக்கு
பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி சேமிப்புக் கணக்குகளுக்குச் சேவை 4 சதவீத வட்டி விகிதத்தினை அளிக்கின்றது. மினிமம் பேலன்ஸ் தேவியில்லை, இணையதளப் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் இல்லை, வங்கி கணக்கில் டெபாசிட் செய்யும் பணத்திற்குக் கேஷ் பேக் ஆஃபர்கள் வழங்கப்படும்.
நடப்பு வங்கி கணக்கு
மேலும் விரைவில் பேடிஎம் நடப்பு வங்கி கணக்குகளை வணிகர்களுக்கு அளிக்கவும் முடிவு செய்துள்ளது.
உங்கள் உடலின் வீரியம் அரசு அனுமதி பெற்றது. 50% ஆஃபர்
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.