Thursday, 31 August 2017

ரிசர்வ் வங்கி கையில் சிக்கிய 10 நிறுவனங்கள்..!

ரிசர்வ் வங்கி இந்திய வங்கி அமைப்பில் குவிந்துக்கிடக்கும் வராக்கடனை தீர்க்க 40 நிறுவனங்களை கண்டறிந்து மீட்டெடுக்கும் முயற்சியில் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் படி மொத்த வராக்கடனில் 25 சதவீத மதிப்பு உடைய 12 பெரிய நிறுவனங்களை பட்டியலிட்ட ரிசர்வ் வங்கி தற்போது மேலும் 10 நிறுவனங்களின் பெயரை வெளியிட்டுள்ளது.

முதல் பட்டியல்
முதல் பட்டியலில் எஸ்ஸார் ஸ்டீல், புஷன் ஸ்டீல், புஷன் பவர், அலோக் இன்டஸ்ட்ரீஸ், எலக்ட்ரோஸ்டீல் ஸ்டீல்ஸ், மோனெட் இஸ்பெட் மற்றும் ஏபிஜி ஷிப்யார்டு ஆகிய நிறுவனங்கள் உட்பட சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 12 நிறுவனங்களை வெளியிட்டது.

2வது பட்டியல்
இன்று வெளியிட்டுள்ள பட்டியலில் 10 நிறுவனங்களை வெளியிட்டுள்ளது இதில் வீடியோகான், ஜேபி அசோசியேட்ஸ், ஐவிஆர்சிஎல், விஷால் ஸ்டீல், உத்தம் கல்வ், காஸ்டெக்ஸ், ருச்சி சோயா, நாகர்ஜூனா ஆயில், எஸ்ஈஎல், யூனிட்டி இன்பராபிராஜெக்ட்ஸ் ஆகிய நிறுவனங்களை அறிவித்துள்ளது.


22 நிறுவனங்கள்
இதுவரை ஆர்பிஐ வெளியிட்ட 2 பட்டியலில் சுமார் 22 நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளது.

80 சதவீத வராக்கடன்
மேலும் ரிசர்வ் வங்கி பட்டியலிட உள்ள 40 நிறுவனங்களின் 80 சதவீத சொத்து வராக்கடனாக உள்ளதால், முதலீட்டாளர்கள் இந்நிறுவனம் மீதான முதலீட்டை குறைக்க திட்டமிட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.