புதிய 200 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கிவெளியிட்டுள்ளது.
புதிய 200 ரூபாய் நோட்டின் முன்புறம் 200 என்று எண்ணிலும், தேவநாகரி எழுத்திலும் அச்சிடப்படிருக்கிறது. இந்த 200 ரூபாய் தாளின் மத்தியில் மகாத்மா காந்தியின் உருவப்படம் அச்சிடப்பட்டுள்ளது. புதிய 200 ரூபாய் நோட்டை வெளிச்சத்தில் பார்க்கும்போது பாதுகாப்பு கோடு பச்சை நிறத்திலிருந்து நீல நிறமாக மாறிக் காணப்படும்.
மகாத்மா காந்தியின் வலதுபுறத்தில் ரிசர்வ் வங்கிஆளுநர் உர்ஜித் படேலின் கையெழுத்து, உறுதி மொழி, ரிசர்வ் வங்கியின் சின்னம் ஆகியவை இடம் பெற்றுள்ளது. அதற்கு அருகில் பச்சை நிறத்திலிருந்து நீல நிறத்திற்கு வண்ணம் மாறும் மை மூலம் 200 ரூபாய் என அச்சிடப்பட்டிருக்கிறது. அதற்கு அருகில் வலதுபுறத்தில் அசோக சக்கரமும், நீர் எழுத்துக்களில் 200 ரூபாய் என்றும் மகாத்மா காந்தியின் உருவமும் உள்ளன.
அடுத்ததாக, ரூபாய் நோட்டுகளின் வரிசை எண் சிறிதாகத் தொடங்கி பெரிய அளவில் இருக்கிறது. இது ஒவ்வொரு தாளின் இடதுபக்க மேல்புறம் மற்றும் வலதுபக்க கீழ்புறத்திலும் அச்சிடப்பட்டிருக்கும். அடுத்ததாக, ரூபாய் தாளின் இரண்டு பக்க ஓரங்களிலும் கண் பார்வையற்றோருக்காக 4 கோடுகளும், அவற்றிற்கு நடுவில் 2 வட்டங்களும் பொறிக்கப்பட்டிருக்கிறது.
நோட்டின் பின்புறம் ரூபாய் அச்சிடப்பட்ட வருடம் 2017 என்றும், தூய்மை இந்தியா திட்டத்தின் இலச்சினையும், வாசகங்களும் இடம்பெற்றிருக்கிறது. மேலும், தேவநாகரிஎழுத்தில் 200 ரூபாய் என அச்சிடப்பட்டுள்ளது. அடுத்ததாக, அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் அனைத்தும் இடம்பெற்றிருக்கிறது. முக்கியமாக, சாஞ்சி ஸ்தூபியின் படம் இடம்பெற்றிருக்கிறது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.