புதிதாக 1,000 ரூபாய் நோட்டுகள் வெளியாகவுள்ளதாக வெளியான செய்திகள் அனைத்தும் தவறானவை என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண மதிப்பழிப்பு நடவடிக்கையின்போது 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. பிறகு புதிய 500 ரூபாய் நோட்டுகளும் 2,000 ரூபாய் நோட்டுகளும் வெளியிடப்பட்டன. தற்போது 200 ரூபாய் நோட்டுகளும் வெளியாகியுள்ளன. இதேபோல் புதிய 1,000 ரூபாய் நோட்டுகளையும் அச்சிட்டு வெளியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. புதிய பாதுகாப்பு அம்சங்களுடனான 1,000 ரூபாய் நோட்டுகள் மைசூரு மற்றும் சல்போனியில் உள்ள அச்சகங்களில் அச்சிடப்பட உள்ளதாக டிஎன்ஏ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது. இந்தச் செய்தி ஊடகங்களில் பரவியது.
இந்தச் செய்தி தவறானது என்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் வெளியிட எந்தத் திட்டமும் இல்லை என்றும் மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நேற்று (ஆகஸ்ட் 29) பொருளாதார விவகாரங்கள் துறையின் செயலாளர் சுபாஸ் சந்திர கார்க் தன் ட்விட்டர் பக்கத்தில், “1,000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் வெளியிட எந்தத் திட்டமும் இல்லை”என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.