Saturday, 11 November 2017

வரி விகிதங்களைக் குறைக்கக் கோரிக்கை!

சரக்கு மற்றும் சேவை வரியின் கீழுள்ள வரி விகிதங்களைக் குறைக்க வலியுறுத்தி காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமை வகிக்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) கவுன்சலிங் கூட்டம் நேற்று (நவம்பர் 10) நடைபெற்றது. இதில் 177 பொருள்களுக்கான வரி வரம்புகள் குறைக்கப்பட்டு. 50 பொருள்களின் வரி 28 சதவிகிதமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சரக்கு மற்றும் சேவை வரியின் ஒட்டுமொத்த கட்டமைப்பையே மாற்றியமைக்க வேண்டும் எனவும் வட்டி விகிதங்கள் மேலும் குறைக்கப்பட வேண்டும் எனவும் கர்நாடகா, புதுச்சேரி, பஞ்சாப் உள்ளிட்ட மாநில அரசுகள் மத்திய அரசுக்குக் கோரிக்கைக் கடிதங்கள் அனுப்பியுள்ளன. அதில் சரக்கு மற்றும் சேவை வரியின் உச்சபட்ச வரி வரம்பை 18 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும் எனவும், பெட்ரோலியப் பொருள்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையைச் சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் கொண்டுவர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.