இன்று உலக சிக்கன தினம்
இன்று இந்தியாவில் மட்டும் தான் இந்த உலக சிக்கன தினம் கொண்டாடப்படுதுனு சொன்னா நம்புவீர்களா.?
இன்றைக்கு உலக சிக்கன தினம் இந்தியாவுல மட்டும் தான் கடைபிடிக்கப்படுகிறது. ஆச்சரியமா இருக்குல்ல. இது தொடர்பான கூடுதல் செய்திகளை தெரிஞ்சுக்கலாம் வாங்க..
1924 இத்தாலியில் இருக்கக்கூடிய மிலான் நகரில் சர்வதேச சேமிப்பு வங்கிகளின் மாநாடு நடந்தது. இம்மாநாட்டில் மக்களிடையே சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்தவும், சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக சிக்கன தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31ஆம் நாள் கொண்டாடப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி உலக சேமிப்பு சிக்கன நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவைப் பொறுத்தமட்டிலும் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் அவர்களின் நினைவு தினம் 1984 முதல் அனுசரிக்கப்படுவதால் ஒரு நாள் முன்னதாக அதாவது அக்டோபர் 30ஆம் தேதியன்று உலக சிக்கன நாள் கடைபிடிக்கப்படுகிறது. உலக நாடுகள் எல்லாமே 31ம் தேதியும் இந்தியாவில் மட்டும் அக்டோபர் 30ஆம் தேதியும் உலக சிக்கன நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் நம்முடைய குழந்தைகளுக்கு பணத்தின் அருமையை பற்றி சொல்லி அவர்களிடையே சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் இதுவே இந்த நாளில் நாம் செய்ய வேண்டிய தலையாய கடமை.!
- ப.கார்த்திகேயன்,
முதுகலை ஆசிரியர்(வணிகவியல்), அரசு மேல்நிலைப்பள்ளி,
ஈசநத்தம்,கரூர் மாவட்டம்.
thank u sir for this information
ReplyDelete