*இன்று முதல் கரூர் மாவட்டத்திற்கு வயது 24.!!*
*கரூர் நகராட்சிக்கு 145..!*
தமிழகத்தில் 125 நகராட்சிகள் உள்ளன. இதில் 1874 ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி கரூர் நகராட்சி உருவாக்கப்பட்டது.
மாநகராட்சி தகுதியை எதிர்நோக்கியுள்ள நிலையில் கரூர் நகராட்சி உருவாக்கப்பட்டு 144 ஆண்டுகள் நிறைவடைந்து. இன்று முதல் 145 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது கரூர் நகராட்சி..!!!
அதேபோல கடந்த 1995ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி திருச்சி மாவட்டம் மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு , நவம்பர் ஒன்றாம் தேதி முதல் கரூர் தீரன் சின்னமலை மாவட்டம் என செயல்படத் தொடங்கியது.
1997 ஆம் ஆண்டு ஜூலை முதல் கரூர் மாவட்டம் என்ற பெயரில் செயல்படுகிறது.
தனி மாவட்டமாக கரூர் மாவட்டம் இன்று 24 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
அடுத்த ஆண்டு வெள்ளிவிழா காண உள்ளது நமது கரூர் மாவட்டம்..!!!
கரூரின் சிறப்புகள் வீடியோ வடிவில்:
https://youtu.be/5LXU1piqQSQ
கரூர் வரலாறு: பகுதி 1
http://vetrikodikattucommerce.blogspot.com/2018/11/1.html
கரூர் வரலாறு: பகுதி 2
http://vetrikodikattucommerce.blogspot.com/2018/11/2.html
நட்புடன்
ப.கார்த்திகேயன், முதுகலை ஆசிரியர் (வணிகவியல்)
அரசு மேல்நிலைப்பள்ளி, ஈசநத்தம், கரூர் மாவட்டம்.
really karur very nice..ur karur informations also very useful to know about karur district... thank u ..i like most karur..
ReplyDelete