Tuesday, 25 December 2018

வாஜ்பாய் நினைவாக 100 ரூபாய் நாணயம்:பிரதமர் மோடி வெளியிட்டார்

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 94-ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவரது உருவம் பொறித்த ரூ. 100 நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை வெளியிட்டார். 

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் கடந்த ஆகஸ்ட் மாதம் உடல்நலக் குறைவால் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

அவரின் 94-ஆவது பிறந்த தினம் செவ்வாய்க்கிழமை(டிச. 25) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, அவரின் நினைவாக ரூ. 100 நாணயத்தை தில்லியில் பிரதமர் மோடி வெளியிட்டார். 

இந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் எல். கே. அத்வானி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.