பாபா ஆம்தேவின் 104-வது பிறந்தநாளான நேற்று, கூகுள் அவருக்கு கவுரவம் செய்தது.
புதுடெல்லி,
இந்தியாவின் தலைசிறந்த சமூக சீர்திருத்தவாதி மற்றும் சமூக ஆர்வலராக அறியப்பட்டவர் முரளிதர் தேவிதாஸ் ஆம்தே. இவர் ‘பாபா ஆம்தே’ என்று அன்போடு அழைக்கப்பட்டார்.
நேற்று இவரின் 104-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பாபா ஆம்தேவின் படத்தை தனது முகப்பு பக்கத்தில் (டூடுல்) வைத்து கூகுள் நிறுவனம் அவருக்கு கவுரவம் செய்தது. வக்கீலான இவர் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்ட தலைவர்களுக்காக வாதாடி சிறை சென்றார்.
தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்த பாபா ஆம்தே, அவர்களின் நல்வாழ்வுக்காக தனது முழு வாழ்வையும் அர்ப்பணித்தார். இவர் கடந்த 2008-ம் ஆண்டு 94 வயதில் மறைந்தார்.
This comment has been removed by the author.
ReplyDelete