வங்கிகள் இணைப்பை கைவிட வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் புதன்கிழமை (டிச. 26) நாடு முழுவதும் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதில் 85,000 வங்கிக் கிளைகளைச் சேர்ந்த 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்கவுள்ளனர். இதனால், வங்கிச் சேவை பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ரூ.1 லட்சம் கோடி காசோலை பரிவர்த்தனைகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பரோடா வங்கி, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வங்கிகள் இணைப்பு நடவடிக்கையைக் கண்டித்து கடந்த 21-ஆம் தேதி வங்கி அதிகாரிகள் நாடு முழுவதும் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் அடுத்தகட்டமாக வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் நாடு முழுவதும் புதன்கிழமை (டிச. 26) ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். வங்கி இணைப்பை கைவிட வலியுறுத்தி நாடு முழுவதும் 85,000 வங்கிக் கிளைகளைச் சேர்ந்த 10 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.