இந்திய அமெரிக்க நல்லுறவின் ஒரு பகுதியாக முதன்முறையாக அமெரிக்காவிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது இந்தியா, முதல்கட்டமாக வரும் திங்களன்று 2 மில்லியன் பீப்பாய்கள் கொண்ட எண்ணெய் கப்பல்கள் இந்தியா வருகிறது.
இந்தியா-அமெரிக்கா இடையே எண்ணெய் ஏற்றுமதி செய்ய கடந்த 40 ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டிருந்தது. கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி, அமெரிக்கா சென்று அப்போதைய அதிபராக இருந்த ஒபாமாவை சந்தித்தார். இதையடுத்து எண்ணெய் ஏற்றுமதிக்கான தடை விலக்கி கொள்ளப்பட்டது.
கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி தற்போதைய அதிபரான டெனால்ட் டிரம்ப்பை சந்தித்து எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டார். இதில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யவதற்கான ஒப்பந்தம் உறுதியானது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.