Wednesday, 20 September 2017

வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு?

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் பிபி.சவுத்ரி அளித்த பதில் வருமாறு: வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க தலைமைத் தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது. ஆதார் அட்டை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது. இந்த வழக்கு நிறைவடைந்த பிறகு இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சமையல் காஸ் மானியம் உட்பட மத்திய அரசின் பல்வேறு சலுகைகளுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கிக் கணக்கு, பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவும் மத்திய அரசு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.