Sunday, 3 September 2017

ஏற்றுமதிக்கு, ‘இ – வாலட்’ வசதி மத்திய அரசு பரிசீலனை

புதுடில்லி : ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு, ‘இ – வாலட்’ எனப்­படும், மின்­னணு பணப் பை வச­தியை ஏற்­ப­டுத்­து­வது குறித்து, மத்­திய அரசு தீவி­ர­மாக பரி­சீ­லித்து வரு­கிறது.இது குறித்து, இந்­திய ஏற்­று­மதி நிறு­வ­னங்­கள் கூட்­ட­மைப்பு வெளி­யிட்­டுள்ள அறிக்கை:முந்­தைய வரி திட்­டத்­தில், ஏற்­று­ம­தி­யா­ளர்­கள், சரக்கு ஏற்­று­ம­திக்கு முன்­ன­தா­கவே, வரி விலக்கு சலு­கையை பெற்று வந்­த­னர்.ஆனால், ஜி.எஸ்.டி., அம­லுக்கு பின், ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் முத­லில் வரி செலுத்தி, சரக்கு ஏற்­று­ம­திக்கு பின், வரித் தொகையை திரும்­பப் பெறு­கின்­ற­னர். இந்த நடை­மு­றை­யால், 1.85 லட்­சம் கோடி ரூபாய், அர­சி­டம் முடங்­கும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது. இத­னால், ஏற்­று­ம­தி­யா­ளர்­களின் நடை­முறை மூல­த­னம், கடு­மை­யாக பாதிக்­கப்­படும்.எனவே, ஏற்­று­ம­திக்கு என, ‘இ – வாலட்’ திட்­டத்தை அமல்­ப­டுத்­து­வது குறித்து, மத்­திய அரசு பரி­சீ­லித்து வரு­கிறது. ஏற்­று­ம­தி­யா­ளர்­கள், வரிக்கு உட்­பட்ட பொருட்­களை கையா­ளும் போது, மின்­னணு பணப் பையில் செய்­துள்ள டிபா­சிட்­டில் இருந்து வரி பிடித்­தம் செய்­யப்­படும். சரக்கு ஏற்­று­மதி செய்த சான்று அளித்­த­வு­டன், வரித் தொகை, மின்­னணு பணப் பையில் வரவு வைக்­கப்­படும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.