Sunday, 24 September 2017

இந்தியாவில் நம்பிக்கை வங்கி பட்டியலில் முதலிடத்தில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

வங்கியின் செயல்பாடு குறித்த ஆய்வில் இந்தியாவில் நம்பிக்கையான வங்கி எது என்ற கேள்விக்கு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் வங்கியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள். 

'பிராண்ட் பைனான்ஸ்' என்ற தனியார் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், 500 உலக வர்த்தக நிறுவனங்களின் பட்டியலில் இந்தியாவில் 'ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ)' பிரபலமான வங்கியாகவும், நம்பிக்கையான வங்கியாகத் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. 

ஏற்கெனவே எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள், 'எஸ்பிஐ வங்கி கணக்கில் இருந்து இதர வங்கிக்கு மாற மாட்டோம்' என்றும், இதர வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் 21.4% பேர் 'தங்களுடைய வங்கி கணக்கை 'ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா' மாற்றத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்கள். இந்த வகையில் நம்பிக்கைதன்மை, நாணயம், முக்கியமான வங்கி என்ற வகையில் எஸ்பிஐ வங்கியில் முதல் இடத்தில் இருக்கிறது. 

நம்பிக்கையான வங்கிகளில் ஹெச்.டி.எஃப்.சி வங்கியும், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவும் முன்னணியில் இருக்கின்றன. புகழ்பெற்ற வங்கிகளின் பட்டியலில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியும், ஹெச்.டி.எஃப்.சி வங்கியும் முன்னணியில் இருக்கின்றன. விசுவாசமான வங்கிகளில் பட்டியலில் சிட்டிபேங்க் முதலிடத்தில் இருக்கிறது. 

இந்திய வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுகின்றன. வாடிக்கையாளர்களைத் தக்க வைக்கவும் போட்டி போடுகின்றன. 'வங்கி சேவையில் திருப்தியில்லை என்றால் ஒரு வங்கியில் இருந்து மாறி மற்றொரு வங்கியில் கணக்கை தொடங்கத் தயாராக இருக்கிறோம்' என்று 34.5% பேர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.