இந்தியப் பங்குச்சந்தையின் வர்த்தக நேரத்தை நீட்டிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தைகளுக்குஈடுகொடுக்கும் வகையிலும் வர்த்தகத்தை மேம்படுத்தவும், இந்தியப் பங்குச்சந்தை வர்த்த நேரத்தை இரவு 7.30 மணி வரையில் நீட்டிக்கலாம் என்ற திட்டம் முன் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், பரிவர்த்தனை, ஊழியர்கள் பற்றாக்குறை, சந்தை ஆதாரங்கள் கணக்கிடுதல் உள்ளிட்ட சில அடிப்படை சிக்கல்களால் பங்குவர்த்தக நேரத்தை நீட்டிப்பது சரி வராது எனப் பங்கு வர்த்தகர்கள் சிலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி பங்குச்சந்தை வர்த்தகம் காலை 9 மணி அளவில் தொடங்கி மாலை 3.30 மணி வரையில் செயல்படுகிறது. இந்த நேரப் பட்டியலில் 15 நிமிடங்கள் கூடலாம், குறையலாம். இந்திய வர்த்தகத்தில் சில பொருள்களின் வர்த்த நேரம் மட்டும், சர்வதேச சந்தை நிலவரத்தை ஒட்டி சில நேரம் மாற்றங்களுக்கு உள்ளாகும்.
இப்போது புதிய திட்டத்தின் அடிப்படையில் மாலை 5 மணி, 5.30 மற்றும் 7.30 மணி ஆகிய மூன்று திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னரும் பங்குவர்த்தக நேரத்தை நீட்டிப்பது குறித்து பல விவாதங்கள் எழுந்தாலும் எந்தத் திட்டமும் அமல்படுத்தப்படவில்லை. இந்தக் கால நீட்டிப்புக்கு வர்த்தகர்கள் சிலர் மட்டும் எதிர்ப்புத் தெரிவித்தாலும், செபி அமைப்பு மற்றும் முன்னணி பங்குதாரர்கள் வர்த்தக நேர நீட்டிப்புக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
This comment has been removed by the author.
ReplyDelete