Thursday, 21 September 2017

பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம்: வாட்ஸ் அப் செய்தி

"A Government Accident Insurance scheme"

An amount of Rs. 12.00 has been Debited to ur account XXXX1017 on 27-05-2017 16:38:19 . Available Clear Bal is Rs. 55276.45.

பிரதம மந்திரி  காப்பீட்டு திட்டம்

உண்மையிலேயே நல்ல  திட்டம்
ஆனால் இங்கு  நம்மில் எத்தனை பேருக்கு  தெரியும் ?எத்தனை வங்கி  அதிகாரிகளுக்கு  தெரியும் ?

மிகவும்  வருத்தப்பட வேண்டிய விஷயம்

சென்றவாரம்  என் வங்கிக்கு  சென்று  இருந்தேன்

அப்போது ஒரு  ஏழைப் பெண்மணி தன் மகனுடன் வந்து இருந்தார்

தன் கணவர் விபத்தில்இறந்து விட்டதாகவும்  அவர் கணக்கில்  இருக்கும்  5000 ரூபாயை எடுக்க அதற்கான சான்றிதழ்களுடன்  வந்து இருந்தார்

வங்கி மேனேஜர்  எல்லாவற்றையும்  பார்த்து  விட்டு பணம் கொடுக்க அனுமதித்தார்

அந்த மேனேஜர்  என் நண்பர் தான்

அந்தப் பெண்  அங்கிருந்து  பணம் பெறப் போகும் போது அந்த  மேனேஜர் மீண்டும் பாஸ்புக்கை  வாங்கி பார்த்து  விட்டு  உன் கணவர் 7000 கடன் வாங்கி  இருக்கிறார்  எனவே நீ தான்  2000 கட்ட வேண்டும்  என சொல்ல   அந்த பெண்  அழுது விட்டார்.

உடனே நான்  அந்த பாஸ் புக்கை  வாங்கி பார்த்தேன் அதில் கடன் இருப்பது தெரிந்தது

அதை தவிர மேலும்  ஒன்றும் தெரிந்தது

அந்த கணக்கில்  இந்த காப்பீட்டு திட்டத்திற்காக 12 ரூபாய் டெபிட் (Debit) செய்யப்பட்டு இருந்தது

இதை நீங்கள்  பார்க்கவில்லையா?
இந்த பெண்ணிற்கு 2 லட்சம்  வருமே என்று  சொன்னதும் மனிதர்  பதறிவிட்டார்!

சார் அந்த  பெண்ணின்  கணவரிடம்  அந்த காப்பீட்டு  திட்டபடிவங்களில் கையெழுத்து  வாங்கினீர்களா  இல்லை என்றால்  எப்படி இந்த பணம்  அவர் Nominee க்கு கிடைக்கும்  என்றவுடன் அவர் தலையில்  கை வைத்து கொண்டார்

பிறகு  அந்த பெண்ணை அழைத்து  7000  வாங்கிக்  கொள்ள அனுமதித்தார்

அந்த பெண்ணுக்கு  2  லட்சம்  கிடைக்குமா  என்பது தெரியவில்லை?

இது தான் இன்றைய நிலை!

எனக்கு  தெரிந்து பெரும்பாலான  வங்கிகள்  இதை செய்யவில்லை
பணத்தை மட்டும்  டெபிட்  செய்து கணக்கு காட்டிவிட்டார்கள்
இதைப் பற்றி Indian  Bankers Association  க்கு   கடிதம்  எழுதி இருக்கிறேன்

ஒரு அரசு  அதன் நல்ல திட்டங்களை  கொண்டு வரத் தான் முடியும்.

அதை செயல்படுத்த வேண்டிய வங்கிகள்  தூங்கினால்  என்ன செய்வது?

இன்று  காலை Modi Parishad  என்ற அமைப்பு  இந்த காப்பீட்டு  திட்டத்தை பற்றி  பதிவிட்டிருந்தது

அதை படித்தவுடன்  இந்த நிகழ்வை நான் பதிவு செய்கிறேன்

இப்போது சொல்லுங்கள்  இது யார் குற்றம்?

நம் நாட்டில்  ஆந்திராவில்  இந்த திட்டத்தை பற்றிய பெரிய விழிப்புணர்வு  ஏற்பட்டுள்ளது.

(ஆசிரியர்கள், பல சமூக சேவகர்கள் அடங்கியுள்ள இந்த குழும நண்பர்கள் தங்களுக்கு தெரிந்த பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் இதை மக்களிடம் கொண்டு  செல்லலாமே..

இது கதையல்ல.வாட்ஸ் அப்பில் நண்பர் அனுப்பியது!!மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் செயல். அதனால்தான் பகிர்கிறேன்.)

நீங்களும் பகிரலாமே!!!

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.