ஸ்டேட் பாங்க் தனது வட்டி விகிதத்தை 0.2 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதன் மூலம் 7.9 சதவீதமாக இருந்த அதன் வட்டி விகிதம் 8.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கி கடந்த ஜூன் 6ம் தேதி ரெப்போ ரேட் எனப்படும் வங்கிகளுக்கு அளிக்கப்படும் குறுகியக்கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து பல்வேறு வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தின. இந்த நிலையில் பாரத ஸ்டேட் பாங்கும் வட்டி விகிதத்தை நேற்று 0.2 சதவீதம் அதிகரித்தது. இதன் மூலம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு வட்டி விகிதத்தை 20 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. இந்த வட்டி விகித உயர்வால் ஏற்கனவே 7.9 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் 0.2 சதவீதம் அதிகரித்து 8.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.இதனால் வீட்டுக்கடன், ஆட்டோக்கடன் உள்ளிட்ட கடன் வாங்குவது பொதுமக்களுக்கு எட்டாக்கனியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வட்டி விகித உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் ஒரு ஆண்டு வரையிலான கடன் தொைகக்கான வட்டி விகிதம் 8.25 சதவீதத்தில் இருந்து 8.45 சதவீதமாகவும், மூன்று ஆண்டுகள் வரையிலான கடனுக்கான வட்டி விகிதம் 8.45 சதவீதம் என்பதில் இருந்து 8.65 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.