ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்றும் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு அதிகபட்ச வீழ்ச்சியை சந்தித்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.63 ஆக இருந்தது. ஆனால், அது கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக, தற்போது தாறுமாறாக சரிந்து வருகிறது. நேற்று ஒரு டாலருக்கு நிகருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.72.08 என்ற அளவில் இருந்தது. நேற்று முன்தினம், வர்த்தக முடிவு நேரத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.71.76 என்ற அளவில் இருந்தது. அதாவது நேற்று மட்டும் 32 பைசா சரிந்துள்ளது. உலகச் சந்தையில் நிலவி வரும் பொருளாதார சூழ்நிலையால், அனைத்து நாடுகளின் கரன்சி மதிப்பும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.2 வரை சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 28ம் தேதி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.70.1 ஆக இருந்தது. அமெரிக்காவின் தொடர் நடவடிக்கைகளினால் இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, சீன பொருட்களுக்கு மேலும் வரியை கூட்ட அமெரிக்க திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. அப்படி அமெரிக்க வரி விதிக்கும்பட்சத்தில், ரூபாயின் மதிப்பு மேலும் சரிய வாய்ப்புள்ளது. ஆனால், இந்த சரிவு தற்காலிகமானதுதான் என்று மத்திய அரசு கூறி வருகிறது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.