: காங்கயம் அடுத்துள்ள நத்தக்காடையூர் பழையகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கயம் இனமாடுகள் ரூ.36 லட்சத்திற்கு விற்பனையானது. காங்கயம் தாலுகா நத்தக்காடையூர் பழையகோட்டையில் காங்கயம் இன மாடுகளுக்கான சந்தை நடந்து வருகிறது. இந்த சந்தையில் காங்கயம் இன மாடுகள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது. இடைத்தரகர் இல்லாத சந்தை என்பதால் விவசாயிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மாட்டுச்சந்தையில் மாடுகளுக்கு நல்ல விலை கிடைக்கிறது. நேற்று 158 கால்நடைகள் வந்தன. இதில், காங்கயம் இனமாடுகள் ரூ.25 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.1.10 லட்சம் வரை விற்றது. நேற்று நடந்த சந்தையில் 71 கால்நடைகள் ரூ.36 லட்சத்திற்கு விற்பனையானதாக சந்தை மேற்பார்வையாளர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.