Friday, 7 September 2018

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு டாலர் ரூ.72 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்திய பொருளாதாரத்தை இது பெரிய அளவில் பாதிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஒரு வாரமாக இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்துள்ளது. சர்வதேச பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை, நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரித்து வருவது, அமெரிக்கா, சீனா வர்த்தகப் போர் போன்ற காரணிகளால், தொடர்ந்து டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்து உள்ளது.ஏழையான நாடுகளுக்கு நிகராக இந்தியாவிலும் டாலருக்கு நிகரான பணத்தின் மதிப்பு மிக மோசமான சரிவை சந்தித்துள்ளது. பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, நேற்றைய டாலர் விலைக்கு எதிரான மதிப்பான ரூ. 71.75 காசுகளுடன் ஆரம்பமானது. தற்போது மேலும் இதில் வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 72 ரூபாயை தொட்டுள்ளது. இந்த மதிப்பு இன்னும் சரிவை சந்திக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பல்வேறு பொருளாதார காரணங்களால் தொடர்ந்து டாலர் மதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.