இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் கடந்த 1ம் தேதி தனது 62வது ஆண்டு தினத்தை கொண்டாடியது. இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்ஐசி), காப்பீடு வணிகத்தில் பல மைல் கற்களை கடந்து, பல முன்மாதிரி சாதனைகளை புரிந்துள்ளது. எல்ஐசி தனது 62வது ஆண்டை நிறைவு செய்யும் இத்தருணத்தில் வாடிக்கையாளர்கள், முகவர்கள், கிளை அலுவலகங்கள் மற்றும் புது வணிகம் ஆகிய அனைத்திலும் தன்னுடைய பலத்தை பெருக்கி, ஆயுள் காப்பீட்டை நாடு முழுவதும் கொண்டு சேர்ப்பதில் குறிப்பிடத்தக்க வகையில் பணியாற்றி உள்ளது. 2017-18 வணிக ஆண்டு இறுதியில் எல்ஐசி தனிநபர் விற்பனைக்கு 30 காப்பீட்டு திட்டங்களை தந்துள்ளது. அதேபோல், எல்ஐசி கேன்சர் கவர், ஜீவன் ஷிரோன்மணி, பீமா மற்றும் பிரதம மந்திரி வய வந்தன யோஜனா என்ற நான்கு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. எல்ஐசியின் பாலிசிகள் பலதரப்பட்ட மக்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்கிறது. 1956ம் ஆண்டு ₹5 கோடி முதலீட்டுடன் ெதாடங்கப்பட்ட எல்ஐசி, தற்போது ₹28.45 லட்சம் கோடி சொத்து மதிப்பு மற்றும் ₹25,84,485 கோடி ஆயுள் நிதி பெற்றுள்ளது. 2017-18ல் தென் மண்டலம், புது வணிகத்தில் 8.8 சதவீத வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்து, மொத்த பிரீமியமாக ₹5978 கோடியை வசூலித்துள்ளது. இதில், புது வணிக பிரீமியம் ₹1223 கோடி ஆகும் என்பது பெருமைக்குரிய விஷயம்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.