Saturday, 15 September 2018

ஈரானில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதியை பாதியாக குறைக்க இந்திய எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் 2வது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது. கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை நாள் ஒன்றுக்கு 6,58,000 பேரல் என்ற அளவில் ஈரானில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தது. செப்டம்பர் மற்றும் அக்டோபரில் இதை நாள் ஒன்றுக்கு 3,60,000 முதல் 3,70,000 பேரல் என குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அமெரிக்கா ஈரான் இடையே 2015ம் ஆண்டு அணு ஆயுத ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தை ஈரான் மீறியதாக கூறி அமெரிக்கா வெளியேறுவதாக அதிபர் டிரமப் கடந்த மே மாதம் அறிவித்தார். பின்னர் ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது. வரும் நவம்பரில் இருந்து பெட்ரோலிய பொருட்கள் மீதும் பொருளாதார தடை வருகிறது. ஈரான் கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்த வேண்டும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து வந்தது. இதையடுத்து ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை முழுவதுமாக நிறுத்தப்பட்டு விடும் என தெரிகிறது. ஈரான் கச்சா எண்ணெயால்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஓரளவு சமாளிக்கப்பட்டு வந்துள்ளது. எனவே, இனிவரும் காலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கு வாய்ப்பே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.