Monday, 10 September 2018

பெட்ரோல் விலை ஒரு பார்வை

சென்னையில் ஆகஸ்ட் மாதம் பெட்ரோல் ரூ.2.32 அதிகரித்துள்ளது. இதில் 15ம் தேதிக்கு பிறகு மட்டும் ரூ.1.44 அதிகரித்துள்ளது.* சென்னையில் டீசல் ஆகஸ்ட் மாதம் ரூ.2.56 உயர்ந்துள்ளது. இதில் 15ம் தேதிக்கு மட்டும் ரூ.1.59 உயர்ந்துள்ளது.* கடந்த 1ம் தேதியில் இருந்து நேற்று வரை ஒரு வாரத்தில் மட்டும் சென்னையில் பெட்ரோல் ரூ.1.56, டீசல் ரூ.2 எகிறியுள்ளது.* ஒரே நாளில் பெட்ரோல் லிட்டருக்கு 52 காசுகளும் டீசல் 57 காசுகளும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.புதுடெல்லி: பெட்ரோல், டீசல் நேற்று மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் பெட்ரோல் லிட்டருக்கு 52 காசு டீசல் 57 காசு அதிகரித்துள்ளது. சென்னையில் டீசல் முதல் முறையாக ரூ.76ஐ தாண்டி ரூ.76.18க்கும், பெட்ரோல் ரூ.83.14க்கும் விற்கப்பட்டது. நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்வதால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விைல, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, இறக்குமதி செலவு ஆகியவற்றை காரணம் காட்டி இந்திய எண்ணெய் நிறுவனங்கள் விலையை தொடர்ந்து உயர்த்திய வண்ணம் உள்ளன. குறிப்பாக கடந்த மாதம் 15ம் தேதிக்கு பிறகுதான் பெட்ரோல், டீசல் விலை வேகமாக அதிகரிக்க துவங்கியது. கடந்த ஆகஸ்ட் மாதம் 1ம் தேதியில் இருந்து 15ம் தேதி வரை பெட்ரோல் விலை சென்னையில் 88 காசு உயர்ந்திருந்தது. 15ம் தேதியில் இருந்து 31ம் தேதி வரை ₹1.44 அதிகரித்திருந்தது. இதன்படி ஆகஸ்ட் மாதத்தில் பெட்ரோல் விலை மொத்தம் ரூ.2.32 அதிகரித்துள்ளது. இதுபோல் கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி வரை டீசல் 97 காசுகளும் 15ம் தேதி முதல் 31ம் தேதி வரை 1.59 காசுகளும் என மொத்தம் ரூ.2.56 உயர்ந்துள்ளது.கடந்த 5ம் தேதி மட்டும் பெட்ரோல் டீசல் விலையில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் எதுவும் செய்யவில்லை. நேற்று முன்தினம் பெட்ரோல் விலை 21 காசுகளும், டீசல் 22 காசுகளும் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் அதிரடியாக விலை உயர்ந்துள்ளது. சென்னையில் பெட்ரோல் நேற்று லிட்டருக்கு 52 காசு அதிகரித்து ரூ.83.14 ஆகவும், டீசல் 57 காசு அதிகரித்து ரூ.76.18ஆகவும் இருந்தது. இதுபோல் டெல்லியில் பெட்ரோல் ரூ.79.99, மும்பையில் ரூ.87.39 எனவும், டீசல் டெல்லியில் ரூ.72.07, மும்பையில் ரூ.76.51 என உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கிறது என எண்ணெய் நிறுவனங்கள் கூறினாலும், ஊக வணிகத்தில் இதன் விலை சற்று சரிவையே சந்தித்திருந்தது. பிரண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 78 டாலராக உள்ளது. ஆனால், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வெகுவாக சரிந்து வருவது மிக முக்கியமான காரணம் என்கின்றனர் சந்தை நிபுணர்கள். இந்தியாவில் கச்சா எண்ணெய் தேவைக்கு 80 சதவீதம் இறக்குமதியை சார்ந்திருக்க வேண்டியுள்ளது. இதனால் ரூபாய் மதிப்பு சரியும்போது கூடுதல் விலை தரவேண்டிய நிலை உள்ளது. இதுபோல், விற்பனை விலையில் பெரும்பான்மையாக வரிகளே ஆக்கிரமிக்கின்றன. கலால் வரியில் ஒரு ரூபாய் குறைத்தால் கூட ஆண்டுக்கு ₹13,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என மத்திய அரசும் தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டியை அமல்படுத்திய பிறகு பெட்ரோல், டீசல் வாட் வரியே பிரதான வருவாய் ஆதாரமாக உள்ளது என மாநில அரசுகளும் வரியை குறைக்க மறுத்து வருகின்றன.மத்திய அரசு கலால் வரியாக லிட்டருக்கு ₹19.48, டீசலக்கு ₹15.33 வசூலித்து வருகிறது. பிராண்டட் பெட்ரோலுக்கு ₹20.66, ஹைஸ்பீடு டீசலுக்கு ₹17.69 வசூலிக்கப்படுகிறது. வாட் வரியை பொறுத்தவரை மும்பையில் அதிகபட்சமாக பெட்ரோலுக்கு 39.12 சதவீதம், டீசலுக்கு 24.78 வசூலிக்கப்படுகிறது. தமிழகத்தில் பெட்ரோலக்கு 32.16 சதவீதம், டீசலுக்கு 24.08 சதவீதம் வாட் வரி உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை தடுக்க மத்திய, மாநில அரசுகள் வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது பொதுமக்களின் மாதாந்திர பட்ஜெட்டில் பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தியுள்ளது.மத்திய அரசு விடாப்பிடி: பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு வரிகளை குறைக்க முன்வராததற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இருப்பினும், மாநிலங்கள்தான் குறைக்க வேண்டும் என மத்திய அரசு கூறுகிறது. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று கூறுகையில், சர்வதேச அளவில் நிகழும் பொருளாதார அரசியல் சூழ்நிலைதான் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணம். மத்திய அரசு இதை கண்காணித்து வருகிறது. இருப்பினும், பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர வேண்டியது அவசியம். இவ்வாறு கொண்டுவந்தால் ₹15,000 கோடி இழப்பு ஏற்படும். இருப்பினும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு கட்டுப்படுத்தப்பட்டு நுகர்வோர் உட்பட அனைவருக்கும் நலன் பயக்கும் என்றார். விலையை குறைக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி கேட்டபோது, கலால் வரியை குறைப்பதால் மட்டுமே நிலை சீராகிவிடாது. ஈரான், வெனிசூலா, துருக்கி போன்ற நாடுகளில் அரசியல் சூழ்நிலைகளால் அங்கு எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் வரியை குறைத்தால் விலை குறையும். உதாரணமாக ஒடிசா அரசு மட்டும் பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியால் ₹7,000 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என்றார்.மாநிலங்களில் வாட் வரி எவ்வளவு: மாநிலம் பெட்ரோல் டீசல்ஆந்திரா 35.77% 28.08%அருணாசல பிரதேசம் 20.00% 12.50%அசாம் 30.90% 22.79%பீகார் 24.71% 18.34%சாட்டீஸ்கார் 26.87% 25.74%டெல்லி 27.00% 17.24%கோவா 16.66% 18.88%குஜராத் 25.45% 25.55%ஹரியானா 26.25% 17.22%இமாசலபிரதேசம் 24.43% 14.38%ஜம்மு காஷ்மீர் 27.36% 17.02%ஜார்கண்ட் 25.72% 23.21%கர்நாடகா 30.28% 20.23%கேரளா 30.37% 23.81%மத்திய பிரதேசம் 35.78% 23.22%மகாராஷ்டிரா (மும்பை, தானே, நவி மும்பை) 39.12% 24.78%மகாராஷ்டிரா(பிற பகுதிகள்) 38.11% 21.89%மணிப்பூர் 23.67% 13.97%மேகாலயா 22.44% 13.77%மிசோரம் 18.88% 11.54%நாகலாந்து 23.21% 13.60%ஒடிசா 24.62% 25.04%பஞ்சாப் 35.12% 16.74%ராஜஸ்தான் 30.80% 24.09%சிக்கிம் 27.87% 15.71%தமிழ்நாடு 32.16% 24.08%தெலங்கானா 33.31% 26.01%திரிபுரா 23.15% 16.18%உத்தரகாண்ட் 27.15% 16.82%உத்தரபிரதேசம் 26.90% 16.84%மேற்கு வங்கம் 25.25% 17.54%யூனியன் பிரதேசங்களஅந்தமான் நிகோபார் 6.00% 6.00%சண்டிகார் 19.76% 11.42%தத்ரா, நாகர்ஹவேலி 20.00% 15.00%டாமன் டையூ 20.00% 15.00%புதுச்சேரி 21.15% 17.15%

No comments:

Post a Comment

நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.