இதனால், தொழிலாளர்கள் கையில் வாங்கும் சம்பளம் அதிகரிக்கும். எனினும், இது தொழிலாளர்களின் உரிமையை பறிக்கும் செயல் என தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நிறுவனங்களில் பணியில் சேரும் தொழிலாளர்களுக்கு, அவர்களது சம்பளத்தில் 12 சதவீதம் பிஎப்க்காக (தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி) பிடித்தம் செய்யப்படுகிறது. இதே அளவு நிறுவனங்களின் பங்களிப்பாக சேர்க்கப்படும். இதன்படி பிஎப் நிதியில் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் பங்களிப்பு சேர்ந்து 24 சதவீதம் வரவு வைக்கப்படும். இதில் இருந்து ஓய்வூதியத்துக்காக ஒதுக்கீடு செய்தது போக எஞ்சிய தொகையில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வீடு கட்டவும், திருமணம், மருத்துவ செலவுகளுக்கு முன்பணமாக எடுத்துக்கொள்ள முடியும். இந்நிலையில், பிஎப் பங்களிப்பை 10 சதவீதமாக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: சமூக பாதுகாப்புக்கான நடவடிக்கையாக, அனைத்து ஊழியர்களுக்கும் பிஎப் பிடித்தம் செய்ய மத்திய அரசு உத்தேசித்துள்ளது. தற்போது சுமார் 10 ேகாடி பேர் சமூக பாதுகாப்பு திட்டத்தில் உள்ளனர். இதை 50 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக தற்போதைய பங்களிப்பான 12 சதவீதத்ைத 10 சதவீதமாக குறைக்க உத்தேசித்துள்ளோம். தற்போது ஒரு நிறுவனத்தில் 20க்கும் கீழான எண்ணிக்கையில் ஊழியர்கள் இருந்தால் 10 சதவீத பிஎப் தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. இனி இந்த வேறுபாடுகள் இன்றி அனைவருக்கும் 10 சதவீதம் என்ற அளவில் பிஎப் பிடித்தம் இருக்கும். பிஎப் பங்களிப்பு தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட தொழிலாளர் அமைச்சக குழு மேற்கண்ட பரிந்துரையை அளித்துள்ளது. பிஎப் பங்களிப்பை 10 சதவீதமாக ஆக்குவது தொழிலாளர்கள் மட்டுமின்றி நிறுவனங்களும் பலன் அடைவார்கள். ஊழியர்கள் கையில் வாங்கும் சம்பளம் அதிகமாக இருக்கும். நிறுவனங்களுக்கும் சுமை குறையும் என்றனர். வயிற்றில் அடிப்பதா? தொழிற்சங்கத்தினர் கொதிப்புமத்திய அரசு பிஎப் பங்களிப்பை குறைப்பது குறித்து தொழிற்சங்கத்தினர் சிலர் கூறியதாவது: ஊழியர்களுக்கு கையில் வாங்கும் சம்பளம் அதிகமாக இருக்கலாம். ஆனால் அவர்களது எதிர்கால சேமிப்புக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும். ஏற்கெனவே பிஎப் வட்டி விகிதம் குறைக்கப்பட்டு விட்டது. இதனால் தொழிலாளர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். தற்போது பங்களிப்பு குறைந்து விட்டால் வட்டி இன்னும் குறைவாக கிடைக்கும். ஊழியர்கள் வாங்கும் சம்பளம் உயரும் அதேநேரத்தில், நிறுவனங்களின் பங்களிப்பான 2 சதவீதம் கிடைக்காமலேயே போய்விடும். எனவே, இதனால் தொழிலாளர்களுக்குதான் கடும் இழப்பு. சமூக பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்துவதும் அதில் அதிகம் பேர் பலனடைய செய்வதும் வரவேற்கத் தக்கதுதான். அதேநேரத்தில், தொழிலாளர்கள் பெற்றுவரும் பலனை பறித்து அளிப்பது எந்த வகையில் நியாயம்?. இது தொழிலாளர்களின் உரிமையை பறித்து அவர்கள் வயிற்றில் அடிக்கும் செயல் என எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.