வராக்கடனால் பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) கடந்த ஜூன் மாதத்துடன் முடிந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ4,876 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் இந்த வங்கி நிகர லாபமாக ரூ2,006 கோடி ஈட்டியிருந்தது. அதேநேரத்தில், மொத்த வருவாய் ரூ62,911.08 கோடியில் இருந்து ரூ65,492.67 கோடியாக உயர்ந்துள்ளது. வராக்கடன் 9.67 சதவீதத்தில் இருந்து 10.69 சதவீதமாக அதிகரித்து, ரூ2,12,840 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டுக்கு நேர்மாறாக நடப்பு ஆண்டில் ரூ4,876 கோடி இழப்பு ஏற்பட்டதற்கு வராக்கடன்தான் காரணம் என கூறப்படுகிறது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. இவ்வலைப்பூவின் பதிவுகள் குறித்து தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.